100 நாட்கள் செயல்முனையின் 11ம் நாள் போராட்டம் மூதூரில்!

“வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 11ம் நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதனை வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இப் போராட்டத்தில் மூதூர் பிரதேசத்தினைச் சேர்ந்த மக்கள், சிவில் அமைப்பினர் பெண்கள் அமைப்பினர், கிராமிய பெண்கள் குழுக்கள் ,இளைஞர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர் என பலர் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும், நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை, கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை, மதத்தை பின்பற்றுவது எங்கள் உரிமை உள்ளிட்ட பல வாசகங்களை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை