• Apr 20 2024

அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு அனுஷ்டிப்பு! samugammedia

Chithra / Jun 6th 2023, 3:54 pm
image

Advertisement

ஆயுதக்குழுவொன்றினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு, இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

1987 மற்றும் 1988 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்த போது இலங்கையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்ததுடன் கிழக்கில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள் குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு அருட்தந்தை சந்திரா அடிகளார் கொண்டுசென்றிருந்தார்.

அத்துடன் நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான செயற்பாட்டில் ஈடுபட்டு, ஆன்மீக வாழ்வினை அர்ப்பணித்தஅருட்தந்தை சந்திரா அடிகளார் 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி ஆயுக்குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு நிறைவு தின விசேட அஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல்சமய ஒன்றியத்தின் அனுசரணையில், மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது.

இதன்போது அடிகளாரின் சமாதியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அடிகளாரின் சேவைநலன் தொடர்பான சிறப்புரைகள் இடம்பெற்றது.

இந்த நினைவு அஞ்சலி விசேட நிகழ்வில் புளியந்தீவு மரியாள் பேராலய பங்குத்தந்தை ஜோர்ச் ஜீவராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சர்வமத தலைவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள் ,அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலையினர் என பலர் கலந்து கொண்டனர்.


அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு அனுஷ்டிப்பு samugammedia ஆயுதக்குழுவொன்றினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு, இன்று உணர்வுபூர்வமாக மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.1987 மற்றும் 1988 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கைக்கு வந்த போது இலங்கையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்ததுடன் கிழக்கில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள் குறித்து சர்வதேசத்தின் கவனத்திற்கு அருட்தந்தை சந்திரா அடிகளார் கொண்டுசென்றிருந்தார்.அத்துடன் நல்லுறவுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மத மக்களை பாதுகாக்கும் மனிதாபிமான செயற்பாட்டில் ஈடுபட்டு, ஆன்மீக வாழ்வினை அர்ப்பணித்தஅருட்தந்தை சந்திரா அடிகளார் 1988 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் திகதி ஆயுக்குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சுட்டுக்கொல்லப்பட்ட அருட்தந்தை சந்திரா அடிகளாரின் 35வது ஆண்டு நிறைவு தின விசேட அஞ்சலி நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் பல்சமய ஒன்றியத்தின் அனுசரணையில், மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிகளாரின் சமாதியில் நடைபெற்றது.இதன்போது அடிகளாரின் சமாதியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அடிகளாரின் சேவைநலன் தொடர்பான சிறப்புரைகள் இடம்பெற்றது.இந்த நினைவு அஞ்சலி விசேட நிகழ்வில் புளியந்தீவு மரியாள் பேராலய பங்குத்தந்தை ஜோர்ச் ஜீவராஜ், அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், சர்வமத தலைவர்கள், சிவில் சமுக பிரதிநிதிகள் ,அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள், பொதுநிலையினர் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement