ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இஞ்சியின் அற்புத பயன்கள்

310

சித்தர்கள் அருளிய இஞ்சி கற்பத்தின் செய்முறை விளக்கம்

இஞ்சியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொண்டு இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு இஞ்சி மூழ்கும்படி சுத்தமான தேனை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு இதை பத்து நாட்கள் சூரிய ஒளியில் வைத்து வர வேண்டும்

பத்து நாட்களும் இஞ்சி தேன் கலவையை நாளொன்றுக்கு நான்கு அல்லது ஐந்து முறை கிளறி விட வேண்டும்

பத்து நாட்கள் கழித்து இதை சாப்பிடுவதற்கு பயன்படுத்தலாம் வெயிலில் வைக்க தேவையில்லை இதுவே இஞ்சி கற்பத்தின் செய் முறையாகும்

சாப்பிட வேண்டிய முறை

தினமும் அதிகாலை ஆறு மணி அளவில் இஞ்சி கற்பத்தில் இரண்டு ஸ்பூன் எடுத்து வெறும் வயிற்றில் முதல் உணவாக இதை உண்ண வேண்டும்

இதனால் கிடைக்கின்ற பயன்கள்

நோய்கள் அனைத்தும் தோன்றுவதற்கு மூல காரணமான இருக்கின்ற மலச்சிக்கல் முழுமையாக நீங்கிவிடும்

மலச்சிக்கல் நீங்கி விட்டால் இதன் மூலம் ரத்தம் சுத்தமடையும் வாதம் பித்தம் சிலேத்துமம் சமநிலையில் இருக்கும்

ரத்தம் சுத்தமாவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்

மேலும் வாத பித்த சிலேத்துமம் சமநிலை படுவதால் உடலில் நோய்கள் எதுவும் தோன்றாது

நோய்கள் தோன்றாமல் இருப்பதால் இதன் மூலம் இளமையும் ஆரோக்கியமும் மிக எளிதாக கிடைத்துவிடும்

மேலும் இஞ்சி கற்பத்தை சாப்பிட்டு வந்தால் வாத குணத்தின் செயல்பாடு எப்பொழுதும் சமநிலையில் இருக்கும்

வாத குணம் சமநிலையாய் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் கை கால் முடக்கம் எனும் வாதநோய் எப்பொழுதும் நம் உடலில் தோன்றாது

இதற்கு காரணம்

இஞ்சி கற்பத்தை சாப்பிட்டு வந்தால் ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாது
ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதால் வாத நோய் நமது உடலில் வருவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகின்றது

மேலும் இஞ்சி கற்பத்தை சாப்பிட்டால் மாரடைப்பு வராது பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு வலி குணமாகும்

இஞ்சியின் முக்கிய பயன்கள்

ஒரு ஸ்பூன் இஞ்சி சாறுடன் அதே அளவு சின்ன வெங்காயச் சாற்றைக் கலந்து தினந்தோறும் காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையும் அழகும் முதுமை வரை பாதுகாக்கப்படும்

உரித்த பூண்டு இதழ் ஆறு அதே அளவு தோல் சீவிய இஞ்சி இவை இரண்டையும் விழுதாக அரைத்து நீரில் கலந்து கொதிக்க வைத்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் உடலுக்கு கேடு விளைவிக்கும் நோய்கள் எதுவும் உடலில் தோன்றாத வண்ணம் நம்மை காக்கும் முதுமை வரை நோயின்றி ஆரோக்கியமாய் வாழலாம்.

இஞ்சி சாறும் எலுமிச்சை சாறும் வகைக்கு ஒரு ஸ்பூன் அளவு கலந்து இதை காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் தோன்றும் நோய்கள் எதுவும் நமது உடலில் தோன்றாது எப்போதும் சுறுசுறுப்பாக உடலின் இயக்கங்கள் இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: