முல்லைத்தீவு மாவட்டநீதிபதி சரவணராஜா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டமை சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக, நீதிபதிக்கு காணப்பட்ட உயிரச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமான முழுமையான விசாரணைகளை தற்போது பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகளுக்கு புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. விரைவில் முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என்றார்.
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா குறித்த விசாரணைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia முல்லைத்தீவு மாவட்டநீதிபதி சரவணராஜா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டமை சம்பந்தமாக விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு அமைவாக, நீதிபதிக்கு காணப்பட்ட உயிரச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமான முழுமையான விசாரணைகளை தற்போது பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.இந்த விசாரணைகளுக்கு புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. விரைவில் முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது என்றார்.