நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கம்!

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி (செப்டம்பர் 22 2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பாக மாதாமாதம் 22ஆம் திகதியன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை