அடிப்படை வசதியற்ற கிரான் மக்கள்-அவலம் நீடிக்கின்றது..!

0
125

தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகானம் ,மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிவட்டுவான் பிரதேச மக்கள் தங்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரி இன்று புதன்கிழமை கவனயீர்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முள்ளிவட்டுவான் பாலர் பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பிரதேச மக்கள் தங்கள் பிரதேசத்திற்கான பொது மயானம், விளையாட்டு மைதானம் போன்றன இல்லாமைக்கும் குடி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதோடு யானை வேலி அமைத்துத் தருமாறும், குடியிருப்பு காணிகள் வன இலாகாவினால் சுவீகரித்தல் போன்றவற்றை தடுக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு அவர்களுக்கு வாரத்தில் இருமுறை மட்டுமே பிரதேச சபையால் குடி நீர் வழங்கப்படுகின்றது எனவும் வழந்கப்படும் நீர் அவர்களுக்கு போதாதக காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்கள் குடயேறியதில் இருந்து இவ் பிரச்சனை நீடிக்கின்றது எனவும் தாங்கள் நீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் சென்று வாகநேரிக்குளத்தில் நீர் எடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

அத்தோடு யானைகளினால் தங்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படுவதாகவும் அதனால் அவர்கள் தமது உறவுகளை இழந்து குடும்பம் வறுமையை நோக்கி செல்கின்றதால் அவர்களுக்க யானை வேலி அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச மக்கள் கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஓட்டமாவடி பிரசே சபை தவிசாளர் ஆகியோருக்கான மகஜரினை ஓட்டமாவடி பிரதேச சபையின் வாகனேரி வட்டாரத்திற்கான உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரனிடம் கையளித்தனர்.