எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

0
182

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்திலுள்ள  வீடொன்றிலிருந்து எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம், குறித்த வீட்டில் வசித்துவந்த 64 வயதுடைய தில்லையம்மா புவனசிங்கம் என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் மகள் பிள்ளைகளுடன் வசித்துவந்த நிலையில் இன்று காலை குறித்த பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோததனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.