நீண்ட நாட்களுக்கு பின் பார்வதியை சந்தித்த செம்பருத்தி சீரியலிலிருந்து விலகிய அந்த பிரபலம்!

225

பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே பேராதரவும் அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான்.

இப்போது இருக்கும் பிரபலமான சின்னத்திரை தொடர்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடித்தனர்.இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து கார்த்தி மாற்றப்பட செம்பருத்தி சீரியல் அடுத்ததாக கார்த்தியாக நடிக்கப் போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.

இப்படி ஒரு நிலையில் செம்பருத்தி தொடரில் கார்த்தியாக பிரபல தனியார் யூடியூப் சேனலில் பணிபுரிந்து வரும் தொகுப்பாளர் அக்னி என்பவர் தற்போது நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி அசோக், கார்த்தி வெளியேறுவதற்கு முன்பாகவே இந்த சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறினார். என்னதான் இந்த சின்னத்திரை தொடரில் இவர் வில்லியாக நடித்து வந்தாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. ஆனால், அந்த சீரியலில் இருந்தும் இவர் திடீரென்று நீக்கப்பட்டார்.

அதிலும் இவர் யூடுயபில்ூ பேசிக்கொண்டு இருக்கும் போதே இவர் சின்னத்திரை தொடரிலிருந்து நீக்கப்பட்டதாக வந்த செய்தியை கேட்டு கதறி அழுதார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவரும் ஷபானாவும் துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: