இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி! மீண்டும் உயரும் விலைகள்

சந்தையில் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவை நெருங்குவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 660 முதல் 680 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு கிலோ கோழி இறைச்சி 1500 ரூபா முதல் 1750 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோழி தீவனத்தின் விலை உயர்வால் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் இலங்கையின் பிரதான மீன் சந்தைகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.

மீன்களின் பெருக்கம் வீழ்ச்சியடைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, 1200- 1500 ரூபாய்க்கும் மீன் விற்பனை செய்யப்பட்டுகிறது.

மரக்கறிகளின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

மேலும், தயிர், ஐஸ் கட்டிகள், ஐஸ்கிரீம், குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் பானப் போத்தல்கள், கோழி இறைச்சி உள்ளிட்ட பல வகையான உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை