திருமணங்களால் நாடு பேராபத்தை சந்திக்க போகிறது: இராணுவ தளபதி

122

நாட்டின் சமகால நிலமையை கருத்தில் கொண்டு சுகாதார வழியாட்டல்களுக்கு அமைவாக 150 பேருடன் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதுவே மோசமான நிலையை உருவாக்ககூடும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

150 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பினும், குறித்த எண்ணிக்கையை விட அதிகளவானோர் திருமண நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பொதுமக்கள் இவ்வாறு சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படும் போது, எதிர்காலத்தில் திருமண கொத்தணி உருவாகும் ஆபத்து இருப்பதாகவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: