பெண்ணின் இதயத்தை வெட்டியெடுத்து உருளைக் கிழங்குடன் சமைத்த கொடூரம்!

96

அமெரிக்காவில் உள்ள ஆக்லஹோமா நகரில், தனது அயல் வீட்டுப் பெண்ணொருவரைக் கொலை செய்ததோடு, அவரின் இதயத்தை வெட்டி எடுத்து உருளைக்கிழங்குடன் வீட்டாருக்கு சமைத்துக் கொடுத்த கொடூரமான ஹோமிசைட் கொலைகாரரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதுமட்டுமன்றி தனது மாமா, மற்றும் மாமாவின் பேத்தியையும் கொன்றுள்ள இந்தப் பயங்கர குற்றவாளி நீதிமன்றத்தில் வைத்து தனக்கு ஜாமின் வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.

பிப்ரவரி 9ம் திகதி நடந்த இந்தக் கொடூர கொலைகள் தினத்தன்று சிக்கஷாவில் உள்ள ஒரு பெண்ணை அவரது வீட்டில் வைத்து கொலை செய்த 42 வயது லாரன்ஸ் பால் ஆண்டர்சன், அவரது இருதயத்தை வெளியே எடுத்து அதை உருளைக்கிழங்குடன் வதக்கி தன் குடும்பத்துக்கு விருந்தாக்கியுள்ளார்.

ஆண்ட்ரியா லின் பிளாங்கென்ஷிப் என்பவதான் இந்தப் பரிதாபத்துக்குரிய பெண். இவரைக் கொலை செய்து இருதயத்தை எடுத்த பால் ஆண்டர்சன் நேராக தன் வீட்டுக்கு வந்துள்ளான். வந்து தன் மாமாவையும் அவரது பேத்தியையும் கொன்றுள்ளான்.

மிகப்பெரிய மூடநம்பிக்கையில் அண்டை வீட்டு பெண்ணைக் கொன்று அவரது இருதயத்தை உருளைக்கிழங்குடன் சமைத்து விருந்து பரிமாறியதற்குக் காரணம் வீட்டைப் பீடித்திருந்த பேய் பிசாசை விரட்டவே என்று தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளான் பால் ஆண்டர்சன்.

எனினும் கொலைகளைச் செய்யும் போது போதைப் பொருள் பாவனை காணப்பட்டதா எனவும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: