உடல் எடையைக் குறைக்கவோ, நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவோ மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் உணவில் மாற்றுச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வோருக்கு நீண்டகால அடிப்படையில் நீரிழிவு நோய், இருதய நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
அத்துடன் மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்துவது உடல் கொழுப்பைக் குறைக்க உதவாமலும் போகலாம் எனவும் இதனால் மரணமடையும் சாத்தியமும் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுச் சர்க்கரை வகைகளில் acesulfame K, aspartame, advantame, cyclamates, neotame, saccharin, sucralose, stevia போன்றவை அடங்கும். விளம்பரம் குறுகிய காலத்தில் எடை குறைந்தாலும் அது நீண்ட காலம் நிலைக்காது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்புப் பிரிவின் இயக்குனர் தெரிவித்தார்.
அத்துடன் சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்க எண்ணுவோர் உணவில் இயல்பாகவே சர்க்கரை இருக்கும் உணவு வகைகளையும் இனிப்பு சேர்க்கப்படாத உணவு, பானங்களையும் பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்தினால் ஆபத்து. ஆய்வில் அதிர்ச்சி தகவல் samugammedia உடல் எடையைக் குறைக்கவோ, நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவோ மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் உணவில் மாற்றுச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வோருக்கு நீண்டகால அடிப்படையில் நீரிழிவு நோய், இருதய நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.அத்துடன் மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்துவது உடல் கொழுப்பைக் குறைக்க உதவாமலும் போகலாம் எனவும் இதனால் மரணமடையும் சாத்தியமும் அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுச் சர்க்கரை வகைகளில் acesulfame K, aspartame, advantame, cyclamates, neotame, saccharin, sucralose, stevia போன்றவை அடங்கும். விளம்பரம் குறுகிய காலத்தில் எடை குறைந்தாலும் அது நீண்ட காலம் நிலைக்காது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்புப் பிரிவின் இயக்குனர் தெரிவித்தார்.அத்துடன் சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்க எண்ணுவோர் உணவில் இயல்பாகவே சர்க்கரை இருக்கும் உணவு வகைகளையும் இனிப்பு சேர்க்கப்படாத உணவு, பானங்களையும் பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.