அடுத்தடுத்து பேரிழப்பை ஏற்படுத்திய கொடிய வைரஸ்!அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..!

573

தமிழ் சினிமாக்களின் பிரபல காமெடி நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானார்.

பிரபல காமெடி நடிகராக வலம்வந்த இவர், தனது 74 வயதில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அண்மைகாலமாகவே தமிழ் திரையுலகில், பிரபல நட்சத்திரங்களின் மரணம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது பாண்டுவின் மரணமும், தமிழ் சினிமாவில் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவருடைய உயிரிழப்பிற்கு பிரபல நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை தமது இரங்கலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: