வாயில்லா பிராணியை காரில் கட்டி தரதரவென வீதியில் இழுத்துச் சென்ற மருத்துவர்!

மருத்துவர் ஒருவரை நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

குறித்த, சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ராஜஸ்தானில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 37 வயதான மருத்துவரின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் சில மாதங்களாக தெரு நாயொன்று உலவி வந்துள்ளது.

அந்த நாய் யாருக்கும் எந்தவித தொந்தரவும் கொடுப்பதில்லை எனவும், யாராவது மீத உணவை வைத்தால் அதை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும், அந்த நாயை மருத்துவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. பணிக்கு சென்று வரும் போது, அந்த நாயை அவர் கல்லால் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது நகராட்சியை தொடர்பு கொண்டு அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கூறியிருக்கிறார். இதனையடுத்து அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் தெரு நாயை பிடிக்க முயற்சித்தனர்.

“ஏன் அந்த நாயை பிடித்து செல்கிறீர்கள். நாயால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை என்றும், இந்தப் பகுதிக்கு அது பாதுகாப்பாக இருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த நாயின் மீது கோபத்தில் இருந்தமருத்துவர் அதனை அப்புறப்படுத்த திட்டமிட்டு பணிக்கு செல்லும் போது நாயை தனது காரின் முன் கண்ணாடியில் பெரிய கயிறை கொண்டு கட்டி காரை ஓட்டிச் சென்றார்.

வாயில்லாத அப்பிராணி காரின் பின்னால் ஓடிய நிலையில் காரின் வேகம் அதிகரித்ததால் நாய் பரிதாபமாக ஓடியது. இந்நிலையில், காரின் பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர், இந்த காட்சியை தனது செல்போனில் காணொளி எடுத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது பின்னர், அந்த காரின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் உதவியுடன், டாக்டரிடம் இருந்து நாயை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ல நிலையில் மருத்துவரின் செயலுக்கு பலரும் கண்டனக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை