• Apr 19 2024

பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும்- ஜோன் குயின்ரஸ் தெரிவிப்பு! samugammedia

Tamil nila / May 21st 2023, 6:57 pm
image

Advertisement

பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவிதித்துள்ளார். 

இன்று யாழ்ப்பாணப்  பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் நடாத்திய முப்பெருந்தமிழ் விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஈழத்திலே பண்பாட்டை பாகுபடுத்தும் போது யுத்தத்திற்கு  முன்னரான காலம் , யுத்த காலம் , யுத்தத்திற்கு பின்னரான காலம் என வகைப்படுத்த முடியும்

யுத்தத்திற்கு முன் கூட்டுக் குடும்பங்களாகவும் உறவுகளுடன் இணைந்ததுமான வாழ்ககை முறை நிலவியது. 

யுத்த காலத்திலே எமக்குள்ளேயுள்ள தொழில் ரீதியான பாகுபாடுகள் களைந்து ஒரு சமூகமாக இணைந்து  கிராமம் , ஊர் , எமது மக்கள், எமது மக்களென பொது நோக்குடன் சீர்ப்படுத்திக்கொண்ட காலமாகக் காணப்பட்டது.

ஆனால் யுத்தத்திற்கு பின்னான காலம் தொழில்நுட்ப யுகத்திற்கு வேகமாக மாறியுள்ளது. அதற்குள் செல்லும் போது எமது பண்பாட்டு விழுமிலயங்களைப் பதுகாக்க சவாலாக உள்ளோம். முழு உலகிற்கிற்கும் பண்பாட்டை எடுத்துச் சொன்னது வடக்கு மண்.  இவ்வாறு பல தமிழ்ப் பண்பாட்டுக் கலைகளில் மாற்றங்களை வடக்கு மண் ஏற்படுத்திக்  கொடுத்திருக்கின்றது

பண்பாடுகளைப் பேண வேண்டிவர்கள் ஆலயங்களும் பெண்களும் தான் என தவறான மூடநம்பிக்கை ஆன்றளவும் உள்ளது. ஆனால் அது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகக் காணப்படுகின்றது. 

ஈழத்திலே கிராமப்புறங்களிலே  கலைகள் வளர்க்கப்பட்டு புலம்பெயர் பண்பாட்டுத் தாக்கங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். - என்றார்

பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகும்- ஜோன் குயின்ரஸ் தெரிவிப்பு samugammedia பண்பாடுகளைப் பேண வேண்டிய கடமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாக காணப்படுகின்றது என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவிதித்துள்ளார். இன்று யாழ்ப்பாணப்  பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் நடாத்திய முப்பெருந்தமிழ் விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழத்திலே பண்பாட்டை பாகுபடுத்தும் போது யுத்தத்திற்கு  முன்னரான காலம் , யுத்த காலம் , யுத்தத்திற்கு பின்னரான காலம் என வகைப்படுத்த முடியும்யுத்தத்திற்கு முன் கூட்டுக் குடும்பங்களாகவும் உறவுகளுடன் இணைந்ததுமான வாழ்ககை முறை நிலவியது. யுத்த காலத்திலே எமக்குள்ளேயுள்ள தொழில் ரீதியான பாகுபாடுகள் களைந்து ஒரு சமூகமாக இணைந்து  கிராமம் , ஊர் , எமது மக்கள், எமது மக்களென பொது நோக்குடன் சீர்ப்படுத்திக்கொண்ட காலமாகக் காணப்பட்டது.ஆனால் யுத்தத்திற்கு பின்னான காலம் தொழில்நுட்ப யுகத்திற்கு வேகமாக மாறியுள்ளது. அதற்குள் செல்லும் போது எமது பண்பாட்டு விழுமிலயங்களைப் பதுகாக்க சவாலாக உள்ளோம். முழு உலகிற்கிற்கும் பண்பாட்டை எடுத்துச் சொன்னது வடக்கு மண்.  இவ்வாறு பல தமிழ்ப் பண்பாட்டுக் கலைகளில் மாற்றங்களை வடக்கு மண் ஏற்படுத்திக்  கொடுத்திருக்கின்றதுபண்பாடுகளைப் பேண வேண்டிவர்கள் ஆலயங்களும் பெண்களும் தான் என தவறான மூடநம்பிக்கை ஆன்றளவும் உள்ளது. ஆனால் அது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகக் காணப்படுகின்றது. ஈழத்திலே கிராமப்புறங்களிலே  கலைகள் வளர்க்கப்பட்டு புலம்பெயர் பண்பாட்டுத் தாக்கங்களிலிருந்து எம்மைப் பாதுகாக்க  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். - என்றார்

Advertisement

Advertisement

Advertisement