• Nov 30 2023

யாழில் திருவள்ளுவர் சிலையுடன் அமையப் பெற்ற பண்ணை சுற்றுவட்டம் சற்றுமுன் திறந்துவைப்பு!

Sharmi / Mar 17th 2023, 7:06 pm
image

Advertisement

யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டம் இன்றையதினம்(17) மாலை திறந்துவைக்கப்பட்டது.

ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட இந்தச் சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையை சொஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறுதிருமுருகன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில்,  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இந்திய துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன், யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர்களான இ.ஆனல்ட் மற்றும் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், மத குருமார்கள், பேராசிரியர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்.வணிகர் கழகத்தினர், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



யாழில் திருவள்ளுவர் சிலையுடன் அமையப் பெற்ற பண்ணை சுற்றுவட்டம் சற்றுமுன் திறந்துவைப்பு யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்துக்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டம் இன்றையதினம்(17) மாலை திறந்துவைக்கப்பட்டது.ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்ட இந்தச் சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையை சொஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறுதிருமுருகன் திரைநீக்கம் செய்து வைத்தார்.இந்நிகழ்வில்,  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, இந்திய துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன், யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர்களான இ.ஆனல்ட் மற்றும் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், மத குருமார்கள், பேராசிரியர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்.வணிகர் கழகத்தினர், தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement