சாதனையுடன் தொடங்கிய IPL தொடரின் முதலாவது போட்டி

0
83

13 வது இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் ஆரம்ப போட்டியை தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் வாயிலாக 20 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் இந்தியன் ப்ரிமியர் லீக் வரலாற்றில் புதிய சாதனையாக இது அமைந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

13 வது இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டியின் முதலாவது போட்டி கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது.அதைத் தொடர்ந்து இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.

கொரோனா வைரஸ் காரணமாக குறித்த போட்டியை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் வாயிலாக 20 கோடி மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

மேலும் உலகின் எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு லீக் போட்டியையும் முதல் நாளில் இத்தனை பேர் பார்வையிட்டுள்ளதில்லை என்றும் அந்த வகையில் இது புதிய உலக சாதனை என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.