• Mar 29 2024

இலங்கை பாராளுமன்றத்தை நோக்கி படை எடுத்த நாட்டின் எதிர்கால தலைவர்கள்!!

crownson / Dec 2nd 2022, 7:59 am
image

Advertisement

இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக அதிக அளவிலான பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் (1) பாராளுமன்றத்தை நோக்கி வருகை தந்ததாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் நாரதவிய ரீதியில் இருந்து 32 பாடசாலைகளை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக நேற்று வருகை தந்திருந்தனர்.

உலக பாராளுமன்ற ஒப்பிடுகையில் ஒரே நாளில் இவ்வளவு பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமை சாதனையாக அமையும் என அவர் மேலும் பெருமை தெரிவித்தார்.

2019 முதல் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொதுமக்கள் கலரியானது, கடந்த செப்டம்பர்  19ஆம் திதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக திறக்கப்பட்டது.

மேலும் எமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 25,000 மேற்பட்ட மாணவர்கள் இதுவரை நடந்த பாராளுமன்ற விவாதங்களை காண வந்துள்ளனர்.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு குவளை பால் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம், எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பாராளுமன்றத்தை நோக்கி படை எடுத்த நாட்டின் எதிர்கால தலைவர்கள் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக அதிக அளவிலான பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் (1) பாராளுமன்றத்தை நோக்கி வருகை தந்ததாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.இதன் அடிப்படையில் நாரதவிய ரீதியில் இருந்து 32 பாடசாலைகளை சேர்ந்த ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்காக நேற்று வருகை தந்திருந்தனர்.உலக பாராளுமன்ற ஒப்பிடுகையில் ஒரே நாளில் இவ்வளவு பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமை சாதனையாக அமையும் என அவர் மேலும் பெருமை தெரிவித்தார். 2019 முதல் கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொதுமக்கள் கலரியானது, கடந்த செப்டம்பர்  19ஆம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக திறக்கப்பட்டது.மேலும் எமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 25,000 மேற்பட்ட மாணவர்கள் இதுவரை நடந்த பாராளுமன்ற விவாதங்களை காண வந்துள்ளனர்.எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஒரு குவளை பால் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம், எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement