தாமரை பறிக்கச்சென்ற யுவதியும் சிறுமியும் நீரில் மூழ்கிப்பலி!

112
The drowning man. The man in water asks about the help.

வெலிஓயா, மெனரவௌ கிராமத்தில் உள்ள டிக்கிரி குளத்தில் தாமரை மலரைப் பறிக்கச் சென்ற பெண்ணும் அவரது உறவினரான சிறுமியும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

கம்பொல தொரஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான எஸ்.ஏ. தனந்தனி மற்றும் அவரது மூத்த சகோதரியின் மகளான 12 வயதான உபேக்ஸா சமோதி என்ற சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்தனர்.

குளத்தில் தாமரை மலர்களைப் பறித்துக்கொண்டு கரை திரும்பிய இவர்கள் கால்களைக் கழுவுவதற்காகக் குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்ட இடத்திற்குச் சென்ற போதே அந்த இடத்தில் மூழ்கி உயிரிழந்தனர் என வெலிஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: