மட்டு வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி; ஊழியர்களின் அசமந்தை போக்கே காரணம்-கதறும் குடும்பம்!

407

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கதிரியக்கவியலாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக உரிய சிகிச்சை பெற முடியாமவ் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தேத்தாத்தீவை சேர்ந்த 8 வயதுடைய மயில்வாகனன் சனுஸிகா என்ற சிறுமி நேற்று விபத்திற்குள்ளானார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த சிறுமி விபத்தில் பாதிக்கப்பட்டு தலையின் மண்டையோட்டில் இரத்த கசிவுடன் மூளை செயலிழந்து உயிருக்கு போராடியுள்ள நிலையில், ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான போராட்டத்தில் குறித்த சிறுமி கவனிப்பின்றி உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

குறித்த சிறுமிக்கு அதிகளவான இரத்தக் கசிவு ஏற்பட்டு மிக ஆபத்தான நிலையில் இருந்துள்ள போதும், குறித்த சிறுமியின் பெற்றோருக்கு வைத்தியசாலை நிலைமையை எடுத்துரைத்திருந்தால், அவர்கள் தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தேனும் தங்கள் குழந்தையை காப்பாற்றி இருப்பார்கள்.

மேலும், குறித்த வைத்தியசாலையில் இரு மாத காலமாக எக்ஸ் ரேய் உத்தியோகத்தர் தங்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குமாறும் இழுத்தடித்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர்.

தமது மகளின் மரணத்திற்கு பணிப்பகிஸ்கரிப்பே காரணமென தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பல மணித்தியால தாமதத்தின் பின்னரே சிகிச்சைக்கு எடுத்ததாகவும், இது தொடர்பில் பொலிசில் முறையிடவுள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவால் 7க்கு மேற்பட்ட உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.