• Mar 28 2024

வெளிநாடுகளில் இலங்கை பெண்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! வடகிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு samugammedia

Chithra / Jun 1st 2023, 12:44 pm
image

Advertisement

பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாட்டிலிருந்து, குடும்ப வறுமை காரணமாக வாழ்வாதாரத்தினை ஈட்டும் நோக்கில் வெளிநாடுகளிற்கு சென்ற பெண்களிற்கு கொடுமைகள் இழைக்கப்படுவதாகவும் அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு    

தெரிவித்துள்ளனர். 

இன்றைய தினம் கிழக்கு நாடுகளிற்கு குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு  சென்ற பெண்களிற்கு இழைக்கப்படும்  கொடுமைகளிற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

அதன் பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

நாட்டிலிருந்து வறுமையின் நிமித்தம் வேலைக்காக வெளிநாடுகளிற்கு சென்ற பெண்கள் அங்கு  மென்மேலும் துன்பப்படுவதால் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருமாறும்  கேட்டு கொண்டுள்ளனர். 

அது மட்டுமன்றி, பெண்கள் தமது ஆசா, பாசங்களை விடுத்து தமது பிள்ளைகளின் நன்மைக்காவும், குடும்ப வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காகவும் கிழக்கு நாடுகளிற்கு செல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், 

இலங்கையை பொறுத்த மட்டில் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றது. இதனால் இங்கு கணவரை இழந்த பெண்களும், உதவிகளற்ற பெண்களும் வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது. 

கூலிக்காக செல்வதற்கே இங்கு வேலை இன்மையால் இடைத்தரகர்களின் பேச்சினையம், பகட்டு வார்த்தைகளையும்  நம்பி கிழக்கு தேசங்களிற்கு வருமானத்தினை ஈட்டுவதற்கு செல்கின்றனர். 

அவ்வாறு செல்வோரிற்கு பாலியல் துஷ்பிரயோகம் மட்டுமன்றி சித்திரவதை போன்ற கொடுமைகளையும் அனுபவித்து வருவதுடன் அவர்களிற்கு வேலைக்கான உதியங்களும் கிடைக்க பெறுவதில்லை. 

அதனால், அரசு பெண்கள் சரியான வேலைகளை செய்வதற்கும், சரியான வழியில் தொழில்வாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக வெளிநாடு செல்வதற்கும் மற்றும் உரிய ஊதியம் கிடைப்பதற்குமான  நிலைப்பாட்டினை உருவாக்குதல் வேண்டும். 

ஆகவே உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் சுகபோகமாக வாழ்கின்றனர் என்பதற்காக ஏனைய பெண்கள் அடைகின்ற துன்பங்களை கண்டுகொள்ளாது சம்மந்தமாக விட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.


வெளிநாடுகளில் இலங்கை பெண்களிற்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் வடகிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு samugammedia பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாட்டிலிருந்து, குடும்ப வறுமை காரணமாக வாழ்வாதாரத்தினை ஈட்டும் நோக்கில் வெளிநாடுகளிற்கு சென்ற பெண்களிற்கு கொடுமைகள் இழைக்கப்படுவதாகவும் அதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வட கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பு    தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் கிழக்கு நாடுகளிற்கு குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு  சென்ற பெண்களிற்கு இழைக்கப்படும்  கொடுமைகளிற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சமூகம் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். நாட்டிலிருந்து வறுமையின் நிமித்தம் வேலைக்காக வெளிநாடுகளிற்கு சென்ற பெண்கள் அங்கு  மென்மேலும் துன்பப்படுவதால் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருமாறும்  கேட்டு கொண்டுள்ளனர். அது மட்டுமன்றி, பெண்கள் தமது ஆசா, பாசங்களை விடுத்து தமது பிள்ளைகளின் நன்மைக்காவும், குடும்ப வாழ்வாதாரத்தினை ஈட்டுவதற்காகவும் கிழக்கு நாடுகளிற்கு செல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் அவர்கள் குறிப்பிடுகையில், இலங்கையை பொறுத்த மட்டில் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கியே காணப்படுகின்றது. இதனால் இங்கு கணவரை இழந்த பெண்களும், உதவிகளற்ற பெண்களும் வாழ முடியாத சூழல் காணப்படுகின்றது. கூலிக்காக செல்வதற்கே இங்கு வேலை இன்மையால் இடைத்தரகர்களின் பேச்சினையம், பகட்டு வார்த்தைகளையும்  நம்பி கிழக்கு தேசங்களிற்கு வருமானத்தினை ஈட்டுவதற்கு செல்கின்றனர். அவ்வாறு செல்வோரிற்கு பாலியல் துஷ்பிரயோகம் மட்டுமன்றி சித்திரவதை போன்ற கொடுமைகளையும் அனுபவித்து வருவதுடன் அவர்களிற்கு வேலைக்கான உதியங்களும் கிடைக்க பெறுவதில்லை. அதனால், அரசு பெண்கள் சரியான வேலைகளை செய்வதற்கும், சரியான வழியில் தொழில்வாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக வெளிநாடு செல்வதற்கும் மற்றும் உரிய ஊதியம் கிடைப்பதற்குமான  நிலைப்பாட்டினை உருவாக்குதல் வேண்டும். ஆகவே உங்கள் வீடுகளில் இருக்கும் பெண்கள் சுகபோகமாக வாழ்கின்றனர் என்பதற்காக ஏனைய பெண்கள் அடைகின்ற துன்பங்களை கண்டுகொள்ளாது சம்மந்தமாக விட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement