கைக்குன்டு அமைச்சரின் வீட்டில் இருந்து எடுத்ததாகும் – குற்றவாளி வாக்குமூலம்

445

நாரஹேன்பிட்ட தனியார் வைத்தியசாலையின் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு கொழும்பு 07 விஜயராம மாவத்தையிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இச் சந்தேகநபரின் வாக்குமூலம் உறுதிப்படுத்தப்படாத நிலையில் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பு 07 இல் உள்ள உத்தியோகபூர்வ வீட்டினை பழுது பார்க்கச் சென்றபோது, ​​அங்குள்ள ஒரு அறையில் ஒரு மேசையின் உள்ளே பல கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை கண்டெடுத்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் இச் சந்தேகநபர் கைக்குண்டைப் பெற்றுள்ளதாகவும் மற்றைய வெடிபொருட்களை அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

எனினும் அந்த வீட்டில் அமைச்சர் ஓருவர் வசித்து வருவதாகவும், அமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்தில் குடியேறுவதற்கு முன்பே அத்தகைய கைக்குண்டுகளை கைப்பற்றியதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

மேலும் திருகோணமலை உப்புவேலியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: