நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு ஏற்பட்ட துயரம்; அதிர்ச்சியில் மணப்பெண் எடுத்த திடீர் முடிவு..!

214

இந்தியா-கடலூர் மாவட்டத்தில் காதல் மணமகன் இறந்த துயரம் தாளாமல் மணப்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் ராகவி. ராகவியின் தந்தை ராஜேந்திரன் 20 வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையில், அவரது தம்பி ராமலிங்கம் என்பவரது பாதுகாப்பில் வளர்ந்து வந்துள்ளார் ராகவி.

மேலும் அந்த இளம்பெண்ணிற்கு கல்லூரியில் படிக்கும்பொழுது சங்கேஷ் என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்தக் காதல் விவகாரம் இருதரப்பு வீட்டாருக்கும் தெரியவந்ததால், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்நிலையில், காதல் மணமகன் சங்கேஷின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், திடீரென்று சிகிச்சை பலனின்றி சங்கேஷ் மரணமடைந்துள்ளார்.

மேலும் தான் காதலித்த காதலனே தனக்குக் கணவனாக வரப்போகிறார் என்ற சந்தோஷத்தில் இருந்த ராகவி, அவரது காதலன் சங்கேஷ் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மனமுடைந்த அவர், சில நாட்களில் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர்.

ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். காதலித்த காதலர்கள் இருவரும் இறந்துபோன சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.