• Sep 28 2024

யாழில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல்! samugammedia

raguthees / May 2nd 2023, 12:46 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும், அவர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் வடபிராந்திய ஐக்கிய தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்தார்.

 யாழ், ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அதிகாலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் சுத்திகரிப்பு பணியாளர்கள் தமது பணிகளை செய்வதாகவும், இதன்மூலம் பொதுமக்கள் எந்தவித சிரமங்களுமின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் வடபிராந்திய ஐக்கிய தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்தார்.

ஆனால், சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும்  யாழ். மாநகரசபை அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு ஆளுநரிடம் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கோரிக்கை  விடுத்ததாகவும், ஆனால் அவரிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை எனவும்  ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்தார்.

யாழில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் - வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia யாழ்ப்பாணத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாகவும், அவர்கள் தமது பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் வடபிராந்திய ஐக்கிய தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்தார். யாழ், ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.அதிகாலையில் பல சிரமங்களுக்கு மத்தியில் சுத்திகரிப்பு பணியாளர்கள் தமது பணிகளை செய்வதாகவும், இதன்மூலம் பொதுமக்கள் எந்தவித சிரமங்களுமின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் வடபிராந்திய ஐக்கிய தொழிற்சங்க முன்னாள் தலைவர் ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்தார்.ஆனால், சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும்  யாழ். மாநகரசபை அரசாங்கத்தை குற்றம் சாட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, வடக்கு ஆளுநரிடம் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் நிரந்தர நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கோரிக்கை  விடுத்ததாகவும், ஆனால் அவரிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை எனவும்  ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement