லண்டனில் மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து மனிதக் கை போன்று தோன்றும் ஒரு பொருள் தொங்கிக்கொண்டிருந்த காட்சி மக்களை திகிலடையச் செய்தது.
குறிப்பாக மத்திய லண்டனிலுள்ள Euston என்னுமிடத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து கை ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திகிலடைந்தனர்.
Louise என்னும் பெண் சமூக ஊடகம் ஒன்றில் இந்தக் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.நான் அந்தக் காட்சியைக் கண்டு நடுநடுங்கிவிட்டேன் என்று கூறும் Louise, இது மோசமான விடயம், இது தவறு என்னும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கியுள்ளார்.
அதாவது, காரின் பின்பக்கத்திலிருந்து ஒரு கை தொங்கிக்கொண்டிருந்தால், மக்கள் அந்தக் காரின் பின்பக்கத்தில் பொருட்கள் வைக்கும் இடத்தில் யாரோ ஒருவரின் உடல் சிக்கிக்கொண்டுள்ளதாக எண்ணி பயப்படக்கூடும்.உண்மையில், அது ஒரு பொம்மைக் கை, யாரோ ப்ராங்குக்காக அதைச் செய்துள்ளார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
அந்த வீடியோவை இதுவரை 65,000 பேர் பார்வையிட்டுள்ள நிலையில், அது வேகமாக பகிரப்பட்டுவருகிறது.
காரின் பின்பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனிதக் கை - வெளியான உண்மைகள் samugammedia லண்டனில் மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து மனிதக் கை போன்று தோன்றும் ஒரு பொருள் தொங்கிக்கொண்டிருந்த காட்சி மக்களை திகிலடையச் செய்தது.குறிப்பாக மத்திய லண்டனிலுள்ள Euston என்னுமிடத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பின்பக்கத்திலிருந்து கை ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட மக்கள் திகிலடைந்தனர்.Louise என்னும் பெண் சமூக ஊடகம் ஒன்றில் இந்தக் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.நான் அந்தக் காட்சியைக் கண்டு நடுநடுங்கிவிட்டேன் என்று கூறும் Louise, இது மோசமான விடயம், இது தவறு என்னும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கியுள்ளார்.அதாவது, காரின் பின்பக்கத்திலிருந்து ஒரு கை தொங்கிக்கொண்டிருந்தால், மக்கள் அந்தக் காரின் பின்பக்கத்தில் பொருட்கள் வைக்கும் இடத்தில் யாரோ ஒருவரின் உடல் சிக்கிக்கொண்டுள்ளதாக எண்ணி பயப்படக்கூடும்.உண்மையில், அது ஒரு பொம்மைக் கை, யாரோ ப்ராங்குக்காக அதைச் செய்துள்ளார்கள் என்பது பின்னர் தெரியவந்துள்ளது.அந்த வீடியோவை இதுவரை 65,000 பேர் பார்வையிட்டுள்ள நிலையில், அது வேகமாக பகிரப்பட்டுவருகிறது.