• Apr 25 2024

உலகிற்கு காத்திருக்கும் பாதிப்பு – மக்களை வாட்டி வதைக்கவுள்ள வெப்பம்- உண்மையான காரணம் என்ன?samugammedia

Tamil nila / Jun 10th 2023, 8:40 am
image

Advertisement

சமீப நாட்களாக  அமெரிக்காவில் கடும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. நிலநடுக் கோட்டிற்கு மேலே உள்ள இந்த நாடுகள் குளிர் பிரதேச நாடுகளாகும். ஆண்டின் சரிபாதி நாட்களுக்கும் மேலாக உறை பனியில் உழன்றுகொண்டிருக்கும் இந்த நாடுகளில் தற்போது வெப்பம் மற்றும் வெப்ப அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் El Nino பருவநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

El Nino பருவம் தென்னமெரிக்காவின் கரைக்கு அருகில் கிழக்கு பசிபிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெதுவெதுப்பான நீரிலிருந்து ஏற்படுகிறது.

இந்த வானிலைப் பருவம் சில இடங்களில் அதிக மழைப்பொழிவையும் மற்ற பகுதிகளில் வறட்சியையும் ஏற்படுத்தும். பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பமான ஆண்டுகளில் பெரும்பாலானவை El Ninoவின்போது நிகழ்ந்தவையாகும்.

2016 இல் El Nino பருவநிலை மாற்றம் ஏற்பட்டதால் உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் உயர்ந்தது.

மீண்டும் அத்தகைய சூழல் தொடர்வதால் உலகில் முன்னைக்காட்டிலும் கடுமையான வெப்பம் பதிவாகலாம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.

பாதிக்கப்படும் நிலையில் உள்ள நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. El Nino வின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தென்னமெரிக்க நாடான பெரு ஒரு பில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கியுள்ளது.

பிலிப்பீன்சில் அரசாங்கம் நிலைமையைச் சமாளிக்கும் வழிகளை ஆராயச் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

உலகிற்கு காத்திருக்கும் பாதிப்பு – மக்களை வாட்டி வதைக்கவுள்ள வெப்பம்- உண்மையான காரணம் என்னsamugammedia சமீப நாட்களாக  அமெரிக்காவில் கடும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. நிலநடுக் கோட்டிற்கு மேலே உள்ள இந்த நாடுகள் குளிர் பிரதேச நாடுகளாகும். ஆண்டின் சரிபாதி நாட்களுக்கும் மேலாக உறை பனியில் உழன்றுகொண்டிருக்கும் இந்த நாடுகளில் தற்போது வெப்பம் மற்றும் வெப்ப அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் El Nino பருவநிலை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.El Nino பருவம் தென்னமெரிக்காவின் கரைக்கு அருகில் கிழக்கு பசிபிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வெதுவெதுப்பான நீரிலிருந்து ஏற்படுகிறது.இந்த வானிலைப் பருவம் சில இடங்களில் அதிக மழைப்பொழிவையும் மற்ற பகுதிகளில் வறட்சியையும் ஏற்படுத்தும். பதிவு செய்யப்பட்டுள்ள வெப்பமான ஆண்டுகளில் பெரும்பாலானவை El Ninoவின்போது நிகழ்ந்தவையாகும்.2016 இல் El Nino பருவநிலை மாற்றம் ஏற்பட்டதால் உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் உயர்ந்தது.மீண்டும் அத்தகைய சூழல் தொடர்வதால் உலகில் முன்னைக்காட்டிலும் கடுமையான வெப்பம் பதிவாகலாம் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள்.பாதிக்கப்படும் நிலையில் உள்ள நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. El Nino வின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் தென்னமெரிக்க நாடான பெரு ஒரு பில்லியன் டொலருக்கு மேல் ஒதுக்கியுள்ளது.பிலிப்பீன்சில் அரசாங்கம் நிலைமையைச் சமாளிக்கும் வழிகளை ஆராயச் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement