• Mar 29 2024

வவுனியா பொது வைத்தியசாலையின், அவசர சிகிச்சைப் பிரிவின் அதி முக்கியத்துவம்!

Tamil nila / Jan 27th 2023, 7:56 am
image

Advertisement

விபத்துக்கள் மற்றும் அவசர நோய் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு, அவய இழப்பு, நீண்டகாலப் பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு போதனா வைத்தியசாலைகளிலும்  முதல் தரத்திலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும், ஒவ்வொரு மாவட்டப்பொது வைத்தியசாலைகளிலும்  இரண்டாம் தரத்திலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும், ஆதார வைத்தியசாலைகளில்  3 ஆம் தரத்திலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் இருக்கவேண்டும்.


வட மாகாணத்தில் யாழ் போதானா வைத்தியசாலையில் மட்டுமே அதற்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு காணப்படும் அதே வேளையில் பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் நெதர்லாந்து உதவித்திட்டத்துடனான விபத்து - அவசர சிகிச்சைத் தொகுதி கட்டப்பட்டுவருகின்றது.



அதற்கு அப்பால் யாழ்ப்பாணம் முதல் அனுராதபுரம் வரையான 200 கிலோ மீட்டர் தொலையில் எந்த ஒரு முழுமையான விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவும் செயற்பாட்டில் இல்லாததால் வவுனியா மாவட்டப் பொதுவைத்தியசாலையின் விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவின் முக்கியத்துவமானது வடமாகாண சுகாதாரத்துறையினரால் மாத்திரமின்றி மத்திய சுகாதாரத் திணைக்களத்தாலும், அரச உயர் மட்ட அதிகாரிகளாலும், ஜனாதிபதி அவர்களாலும் நேரடியாகப் பார்வையிடப்பட்டு முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.



வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் 2014ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நான்கு மாடிகளைக்கொண்ட விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவு நிதிப்பற்றாக்குறையால் நிலத்தளம் மட்டுமே பூரணப்படுத்தப்பட்டு முதலாம் தளவேலைகள் பாதியளவில் பூரணப்படுத்தப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு பகுதியளவில் செயற்பட ஆரம்பித்தது. 


ஆனாலும் சத்திரசிகிச்சைக் கூடம், அதிதீவிர சிகிச்சைப்பிரிவு, விடுதிகள் என்பன மேல்தளங்களில் அமையவிருந்த நிலையில் வினைத்திறனற்ற ஒரு சேவையையே குறித்த பிரிவு வழங்கி வருகின்றது. 


இந்த நிலையில் 2021ம் ஆண்டுக்குரிய பாதீட்டறிக்கையில் குறித்த செயற்றிட்டத்தினைப் பூரணப்படுத்தவென ஒரு தொகை நிதி ஒதுக்கப்பட்டு கட்டடத்திணைக்களத்தால் மதிப்பீடும் செய்யப்பட்டு ஒப்பந்தகாரருக்கென விலைமனுக்களும்கோரும் தறுவாயில் நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மூலதன வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு மேற்கொள்ளப்பட்ட அறிவித்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில் கூரையில்லாமல் பாதுகாப்பின்றிப் பாதியில் நின்ற கட்டடம் மழை மற்றும் சூழல் காரணிகளால் சேதமடைய ஆரம்பித்து சில இடங்களில் கொங்கிறீட் தளத்தில் விரிசல் நீர் ஒழுகல் போன்றன ஏற்பட்டு கட்டடம் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. 


குறித்த பிரச்சினையை ஆய்வுசெய்த கட்டடங்கள் திணைக்களத்தினர் குறித்த கட்டடம் மிகவிரைவாக கொங்கிறீட் தளம் மற்றும் கூரை வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படாவிடின் பாவனைக்கு உதவாது தரமிழந்து முற்றாக இடித்தழிக்கப்படும் நிலைக்குச் செல்லலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தனர். 


இதனைத்தொடர்ந்து கட்டடத்தின் நிலை பற்றியும், விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவு பற்றியும் வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள் குழாம் போன்றவற்றினால் மாகாண – தேசிய சுகாதாரத் திணைக்களங்களுக்கும், வடமாகாணப் பிரதம செயலாளர், மாகாண ஆளுனர் ஆகியோருக்குத் தொடர்ச்சியான கடிதங்கள் எழுதிய நிலையில் அனைத்துத் தரப்பினரும் குறித்த கட்டடத்தைப் பார்வையிட்டு வடமாகாண மூலதன வேலைத்திட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்படவேண்டிய வேலைத்திட்டம் இதுவே என்ற கொள்கை ரீதியிலான முடிவினை எடுத்திருந்தனர். இதைவிடவும் வடமாகாணத்திற்குரிய சிறப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் பிரச்சினையை நேரில் பார்வையிட்டு உறுதி செய்து கொண்டார்கள்.


குறித்த வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும், அதற்குரிய நிதிமூலங்கள் கிடைக்காத நிலையில் உலக வங்கியின் நிதியுதவியில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு செயற்றிட்டமான ஆரம்ப சுகாதார உறுதிப்படுத்தல் திட்டத்தினூடாக இதற்கு நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி, மத்திய சுகாதாரக் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த உலக வங்கித்திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் இது தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் பலவற்றில் ஈடுபட்டு அதற்குரிய அனுமதியையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 


அதைவிடவும் குறித்த நிதி ஒதுக்கப்பட்டதன் நோக்கம் குறித்த கட்டடத்தைப் பாதுகாத்து குறைந்தபட்ச சேவை வழங்கலை உறுதிப்படுத்துவதே அன்றி  கட்ட வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய குறித்த நிதி போதுமானதல்லது என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். அடுத்ததாக குறித்த ஐந்தாண்டுத் திட்டத்தினூடு வருடாந்தம் வடமாகாணத்திற்கு சுகாதாரத்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியைவிட இருமடங்குக்கும் அதிகளவான நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம் அதிலிருந்து வவுனியா மாவட்டப்பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவிற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்பட்டது.


 உலக வங்கி உதவியுடனான இந்த நிதிமூலத்தையும் தவறவிடுமிடத்து வேறு எந்த நிதிமூலத்தினூடாவும் குறித்த தொகையினைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியப்பாடு எமது நாட்டில் கிடையாது என்பதே தீர்க்கதரிசனம். அடுத்த வருடத்திற்குள்ளும் குறித்த கட்டடம் பாதுகாக்கப்படாது போகுமாயின் கட்டடம் சிதிலமடைந்து தற்போது நடைபெறும் குறைந்த பட்சத் சேவைகளும் இல்லாமல் போகும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு மாகாணம் தள்ளப்படலாம்.


 இந்த விடங்களின் பின்புலத்தை ஆராயாமல் எந்த விடயத்தையும் எதிர்த்தே பழக்கப்பட்ட குழப்பவாதிகள் குறித்த நிதி ஒதுக்கீட்டை எதிர்க்க முற்பட்டுள்ளமையும், இதனைப் பயன்படுத்திக் குளிர்காய எண்ணும் பிரதேச வாதிகளின் செயற்பாடுகளும் அருவருப்பூட்டுகின்றன. 


இவ்வாறான எதிர்ப்புக்கள் காரணமாக ஒதுக்கப்பட இருந்த நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


மாகாணத்திற்கு மிக அத்தியாவசியமான இந்தச் செயற்றிட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீட்டை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் தூரநோக்குடன் ஒன்றுபட்டுச் சிந்திப்பவர்களாகவும் நாங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் அவா.


வவுனியா பொது வைத்தியசாலையின், அவசர சிகிச்சைப் பிரிவின் அதி முக்கியத்துவம் விபத்துக்கள் மற்றும் அவசர நோய் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்பு, அவய இழப்பு, நீண்டகாலப் பின்விளைவுகளைத் தவிர்ப்பதற்காக ஒவ்வொரு போதனா வைத்தியசாலைகளிலும்  முதல் தரத்திலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும், ஒவ்வொரு மாவட்டப்பொது வைத்தியசாலைகளிலும்  இரண்டாம் தரத்திலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும், ஆதார வைத்தியசாலைகளில்  3 ஆம் தரத்திலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவும் இருக்கவேண்டும்.வட மாகாணத்தில் யாழ் போதானா வைத்தியசாலையில் மட்டுமே அதற்குரிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு காணப்படும் அதே வேளையில் பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில் நெதர்லாந்து உதவித்திட்டத்துடனான விபத்து - அவசர சிகிச்சைத் தொகுதி கட்டப்பட்டுவருகின்றது.அதற்கு அப்பால் யாழ்ப்பாணம் முதல் அனுராதபுரம் வரையான 200 கிலோ மீட்டர் தொலையில் எந்த ஒரு முழுமையான விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவும் செயற்பாட்டில் இல்லாததால் வவுனியா மாவட்டப் பொதுவைத்தியசாலையின் விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவின் முக்கியத்துவமானது வடமாகாண சுகாதாரத்துறையினரால் மாத்திரமின்றி மத்திய சுகாதாரத் திணைக்களத்தாலும், அரச உயர் மட்ட அதிகாரிகளாலும், ஜனாதிபதி அவர்களாலும் நேரடியாகப் பார்வையிடப்பட்டு முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும்.வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் 2014ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நான்கு மாடிகளைக்கொண்ட விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவு நிதிப்பற்றாக்குறையால் நிலத்தளம் மட்டுமே பூரணப்படுத்தப்பட்டு முதலாம் தளவேலைகள் பாதியளவில் பூரணப்படுத்தப்பட்ட நிலையில் 2019ம் ஆண்டு பகுதியளவில் செயற்பட ஆரம்பித்தது. ஆனாலும் சத்திரசிகிச்சைக் கூடம், அதிதீவிர சிகிச்சைப்பிரிவு, விடுதிகள் என்பன மேல்தளங்களில் அமையவிருந்த நிலையில் வினைத்திறனற்ற ஒரு சேவையையே குறித்த பிரிவு வழங்கி வருகின்றது. இந்த நிலையில் 2021ம் ஆண்டுக்குரிய பாதீட்டறிக்கையில் குறித்த செயற்றிட்டத்தினைப் பூரணப்படுத்தவென ஒரு தொகை நிதி ஒதுக்கப்பட்டு கட்டடத்திணைக்களத்தால் மதிப்பீடும் செய்யப்பட்டு ஒப்பந்தகாரருக்கென விலைமனுக்களும்கோரும் தறுவாயில் நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மூலதன வேலைத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துமாறு மேற்கொள்ளப்பட்ட அறிவித்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.இந்த நிலையில் கூரையில்லாமல் பாதுகாப்பின்றிப் பாதியில் நின்ற கட்டடம் மழை மற்றும் சூழல் காரணிகளால் சேதமடைய ஆரம்பித்து சில இடங்களில் கொங்கிறீட் தளத்தில் விரிசல் நீர் ஒழுகல் போன்றன ஏற்பட்டு கட்டடம் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. குறித்த பிரச்சினையை ஆய்வுசெய்த கட்டடங்கள் திணைக்களத்தினர் குறித்த கட்டடம் மிகவிரைவாக கொங்கிறீட் தளம் மற்றும் கூரை வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படாவிடின் பாவனைக்கு உதவாது தரமிழந்து முற்றாக இடித்தழிக்கப்படும் நிலைக்குச் செல்லலாம் என்று கருத்துத் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து கட்டடத்தின் நிலை பற்றியும், விபத்து – அவசர சிகிச்சைப் பிரிவு பற்றியும் வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள் குழாம் போன்றவற்றினால் மாகாண – தேசிய சுகாதாரத் திணைக்களங்களுக்கும், வடமாகாணப் பிரதம செயலாளர், மாகாண ஆளுனர் ஆகியோருக்குத் தொடர்ச்சியான கடிதங்கள் எழுதிய நிலையில் அனைத்துத் தரப்பினரும் குறித்த கட்டடத்தைப் பார்வையிட்டு வடமாகாண மூலதன வேலைத்திட்டங்களில் முன்னுரிமைப்படுத்தப்படவேண்டிய வேலைத்திட்டம் இதுவே என்ற கொள்கை ரீதியிலான முடிவினை எடுத்திருந்தனர். இதைவிடவும் வடமாகாணத்திற்குரிய சிறப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் பிரச்சினையை நேரில் பார்வையிட்டு உறுதி செய்து கொண்டார்கள்.குறித்த வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரும், அதற்குரிய நிதிமூலங்கள் கிடைக்காத நிலையில் உலக வங்கியின் நிதியுதவியில் செயற்படுத்தப்படும் ஐந்தாண்டு செயற்றிட்டமான ஆரம்ப சுகாதார உறுதிப்படுத்தல் திட்டத்தினூடாக இதற்கு நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சி, மத்திய சுகாதாரக் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது. குறித்த உலக வங்கித்திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் இது தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் பலவற்றில் ஈடுபட்டு அதற்குரிய அனுமதியையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. அதைவிடவும் குறித்த நிதி ஒதுக்கப்பட்டதன் நோக்கம் குறித்த கட்டடத்தைப் பாதுகாத்து குறைந்தபட்ச சேவை வழங்கலை உறுதிப்படுத்துவதே அன்றி  கட்ட வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்ய குறித்த நிதி போதுமானதல்லது என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். அடுத்ததாக குறித்த ஐந்தாண்டுத் திட்டத்தினூடு வருடாந்தம் வடமாகாணத்திற்கு சுகாதாரத்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியைவிட இருமடங்குக்கும் அதிகளவான நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம் அதிலிருந்து வவுனியா மாவட்டப்பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவிற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்பட்டது. உலக வங்கி உதவியுடனான இந்த நிதிமூலத்தையும் தவறவிடுமிடத்து வேறு எந்த நிதிமூலத்தினூடாவும் குறித்த தொகையினைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியப்பாடு எமது நாட்டில் கிடையாது என்பதே தீர்க்கதரிசனம். அடுத்த வருடத்திற்குள்ளும் குறித்த கட்டடம் பாதுகாக்கப்படாது போகுமாயின் கட்டடம் சிதிலமடைந்து தற்போது நடைபெறும் குறைந்த பட்சத் சேவைகளும் இல்லாமல் போகும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு மாகாணம் தள்ளப்படலாம். இந்த விடங்களின் பின்புலத்தை ஆராயாமல் எந்த விடயத்தையும் எதிர்த்தே பழக்கப்பட்ட குழப்பவாதிகள் குறித்த நிதி ஒதுக்கீட்டை எதிர்க்க முற்பட்டுள்ளமையும், இதனைப் பயன்படுத்திக் குளிர்காய எண்ணும் பிரதேச வாதிகளின் செயற்பாடுகளும் அருவருப்பூட்டுகின்றன. இவ்வாறான எதிர்ப்புக்கள் காரணமாக ஒதுக்கப்பட இருந்த நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மாகாணத்திற்கு மிக அத்தியாவசியமான இந்தச் செயற்றிட்டத்திற்குரிய நிதி ஒதுக்கீட்டை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் தூரநோக்குடன் ஒன்றுபட்டுச் சிந்திப்பவர்களாகவும் நாங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்தக்கட்டுரையின் அவா.

Advertisement

Advertisement

Advertisement