• Mar 29 2024

உயிர் அச்சுறுத்தல் காரணமாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு செல்லவில்லை-அச்சம் வெளியிட்ட பெண்! SamugamMedia

Sharmi / Mar 14th 2023, 3:50 pm
image

Advertisement

நாகர்கோவிலில் துப்பாக்கி பிரயோகம், தடியடி, கொட்டான் தாக்குதல், ஆலய சப்பற கொட்டகையும் ஒரு பகுதி தீயில் எரிந்த சம்பத்துடன் காயமடைந்தவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லவில்லை நாகர்கோயில் பெண் ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

வேறு ஒருவரின் பிரச்சினைக்காக மைதானத்தில் நின்ற அனைவரையும் பொலிசார் அடித்து சித்திரவதை செய்தார்கள் என நாகர் கோயில் கிழக்கு, நாகர் கோயிலினை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

மைதானத்தில் எனது மகன் விளையாடிக் கொண்டிருந்தமையால்  அவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக 07.45 மணியளவில் மைதானத்திற்கு சென்றேன். அப்பொழுது அங்கு நின்ற பொலிசார் லத்தியால் அடித்து அங்கு நின்றோர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர்.

அதுமட்டுமன்றி கற்களால் எறிந்தும்  எம்மை தாக்கினார்கள்.இதனால்  நாம் அலறியடித்தவாறு ஓடினோம். தொடர்ந்து அவர்கள் தகாத  வார்த்தைகளுடன் தூசனங்கள் எல்லாம் பேசி ஓடுங்களடி என்று களைத்தார்கள்.

பயத்தில் நாம் மறைந்து ஓடி வந்தோம் எனவும் தெரிவித்துள்ளார். வேறு ஒருவரினுடைய பிரச்சினைக்காகவே வருகை தந்த பொலிசார் அங்கு நின்ற அனைவரையும் தாக்கினார்கள்.

அங்கு அக்காவின் மகனிற்கு காலிற்குள் வெடி வைத்தார்கள். அத்துடன் பைப்புக்கள் போன்றவற்றால் தாக்கியதில் அவரது முதுகு பகுதி அனைத்தும் இரத்த வெள்ளம் ஆனது.
பொலிசாருக்கு பயந்தே நாம் மருத்துவமனைகும்  செல்லவில்லை. ஏனெனில், காசிற்காக மைதானத்திற்கு வந்து இவ்வளவு சித்திரவதை செய்தவர்கள் எம்மையும் கொலை செய்ய மாட்டார்கள் என்பதில் எந்த விதமான  சந்தேகமுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


உயிர் அச்சுறுத்தல் காரணமாக காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு செல்லவில்லை-அச்சம் வெளியிட்ட பெண் SamugamMedia நாகர்கோவிலில் துப்பாக்கி பிரயோகம், தடியடி, கொட்டான் தாக்குதல், ஆலய சப்பற கொட்டகையும் ஒரு பகுதி தீயில் எரிந்த சம்பத்துடன் காயமடைந்தவர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லவில்லை நாகர்கோயில் பெண் ஒருவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.வேறு ஒருவரின் பிரச்சினைக்காக மைதானத்தில் நின்ற அனைவரையும் பொலிசார் அடித்து சித்திரவதை செய்தார்கள் என நாகர் கோயில் கிழக்கு, நாகர் கோயிலினை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். மைதானத்தில் எனது மகன் விளையாடிக் கொண்டிருந்தமையால்  அவரை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக 07.45 மணியளவில் மைதானத்திற்கு சென்றேன். அப்பொழுது அங்கு நின்ற பொலிசார் லத்தியால் அடித்து அங்கு நின்றோர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர்.அதுமட்டுமன்றி கற்களால் எறிந்தும்  எம்மை தாக்கினார்கள்.இதனால்  நாம் அலறியடித்தவாறு ஓடினோம். தொடர்ந்து அவர்கள் தகாத  வார்த்தைகளுடன் தூசனங்கள் எல்லாம் பேசி ஓடுங்களடி என்று களைத்தார்கள். பயத்தில் நாம் மறைந்து ஓடி வந்தோம் எனவும் தெரிவித்துள்ளார். வேறு ஒருவரினுடைய பிரச்சினைக்காகவே வருகை தந்த பொலிசார் அங்கு நின்ற அனைவரையும் தாக்கினார்கள். அங்கு அக்காவின் மகனிற்கு காலிற்குள் வெடி வைத்தார்கள். அத்துடன் பைப்புக்கள் போன்றவற்றால் தாக்கியதில் அவரது முதுகு பகுதி அனைத்தும் இரத்த வெள்ளம் ஆனது. பொலிசாருக்கு பயந்தே நாம் மருத்துவமனைகும்  செல்லவில்லை. ஏனெனில், காசிற்காக மைதானத்திற்கு வந்து இவ்வளவு சித்திரவதை செய்தவர்கள் எம்மையும் கொலை செய்ய மாட்டார்கள் என்பதில் எந்த விதமான  சந்தேகமுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement