• Apr 25 2024

370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி நடந்து உலக சாதனை படைத்த இரும்பு இளைஞன்!

Sharmi / Jan 30th 2023, 5:34 pm
image

Advertisement

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 370 கிலோகிராம் எடையுள்ள கார் ஒன்றை தனது உடலால் தூக்கிச் சென்று சாதனை படைத்துள்ளார்.

குமரி மாவட்டம் தாமரைக்குட்டிவிளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் எனும் 39 வயதான இளைஞரே இச்சாதனையை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் இரும்பு இளைஞராக அறியப்படுபவர் இவர். பஞ்சாப் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் இவர் மூன்றாவது இடம்பிடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே 13. 5 தொன் எடை கொண்ட லொறியை 111 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று இந்திய தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் நாகர் கோயிலில் நேற்று 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிச் சென்று அவர் சாதனை படைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ் அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.


சோழன் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்கள் இச்சாதனையை அங்கீகரித்து சாதனை சான்றிதழ் பதக்கம் வழங்கியுள்ளார்.




370 கிலோ எடை கொண்ட காரை தூக்கி நடந்து உலக சாதனை படைத்த இரும்பு இளைஞன் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 370 கிலோகிராம் எடையுள்ள கார் ஒன்றை தனது உடலால் தூக்கிச் சென்று சாதனை படைத்துள்ளார்.குமரி மாவட்டம் தாமரைக்குட்டிவிளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் எனும் 39 வயதான இளைஞரே இச்சாதனையை படைத்துள்ளார்.தமிழ்நாட்டின் இரும்பு இளைஞராக அறியப்படுபவர் இவர். பஞ்சாப் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் இவர் மூன்றாவது இடம்பிடித்துள்ளார்.இவர் ஏற்கனவே 13. 5 தொன் எடை கொண்ட லொறியை 111 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று இந்திய தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.இந்நிலையில் நாகர் கோயிலில் நேற்று 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிச் சென்று அவர் சாதனை படைத்தார்.இந்நிகழ்வில் அமைச்சர் மனோ தங்கராஜ் அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.சோழன் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்கள் இச்சாதனையை அங்கீகரித்து சாதனை சான்றிதழ் பதக்கம் வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement