• Mar 29 2024

தாயாரை திருத்தும் நோக்கில் ஊரையே உலுக்கிய சிங்கப்பெண்...! samugammedia

Sharmi / May 26th 2023, 2:28 pm
image

Advertisement

கிராமவாசிகளுடன் தயார் கள்ளத் தொடர்பில் இருந்ததால் அவரது மகள் கிராமத்தையே கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் சந்திரகிரி அருகே உள்ளது புதிய சேனம் பட்டிலா என்கிற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கிராமத்தில் 19 வயதான கீர்த்தி தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். தாய்க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்தமையால் அங்கிருந்து  வேறு எங்காவது சென்று வாழலாமென திட்டமிட்ட நிலையில் அதற்கு அவரது தாயார் மறுத்துள்ளார்.

அதனால், தாயை பயமுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பீரோவுக்கு தீ வைத்த நிலையில் பீரோவுக்குள் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2500 ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. அதனை, பில்லி, சூனியம் வைத்து விட்டதாக அயலவர்கள் பயமுறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் தாய் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு நாள் அவரின் சேலை தீப்பற்றி இருந்துள்ளது.  இதுவும் கீர்த்தியின் வேலையே. ஆனால் எதுவும் தெரியாததை போன்று தாயாரை காப்பாற்றியுள்ளார். இதையடுத்து தாயர் பூசாரி, மந்திரவாதிகளை அழைத்து  பூஜைகள் செய்துள்ளார்.

இத்தனை செய்தும் தாய்  ஊரை விட்டு கிளம்பாமையால் தன் அம்மாவுடன் பழகியவர்களின் வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு தீ வைக்க கிராம வாசிகள்  தங்கள் கிராமத்திற்கு பில்லி சூனியம் வைத்து விட்டதாக மந்திரவாதிகள், பூசாரிகளை அழைத்து பூஜை செய்வது, ஆடுகளை லி கொடுப்பது என்று பல வேலைகளை செய்துள்ளனர். ஆனாலும்,  பிரச்சனை தீராது இருந்துள்ளது.

இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரிய வர இது குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் கிராமத்தை கண்காத்ததுடன் பலரை விசாரணையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கீர்த்தி சிக்கிய நிலையில் அவர் உண்மையை கூறியுள்ளார். அதையடுத்து  பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

தாயாரை திருத்தும் நோக்கில் ஊரையே உலுக்கிய சிங்கப்பெண். samugammedia கிராமவாசிகளுடன் தயார் கள்ளத் தொடர்பில் இருந்ததால் அவரது மகள் கிராமத்தையே கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் சந்திரகிரி அருகே உள்ளது புதிய சேனம் பட்டிலா என்கிற கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கிராமத்தில் 19 வயதான கீர்த்தி தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். தாய்க்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்தமையால் அங்கிருந்து  வேறு எங்காவது சென்று வாழலாமென திட்டமிட்ட நிலையில் அதற்கு அவரது தாயார் மறுத்துள்ளார். அதனால், தாயை பயமுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பீரோவுக்கு தீ வைத்த நிலையில் பீரோவுக்குள் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தில் 2500 ரூபாய் பணம் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. அதனை, பில்லி, சூனியம் வைத்து விட்டதாக அயலவர்கள் பயமுறுத்தியுள்ளனர்.அதன் பின்னர் தாய் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு நாள் அவரின் சேலை தீப்பற்றி இருந்துள்ளது.  இதுவும் கீர்த்தியின் வேலையே. ஆனால் எதுவும் தெரியாததை போன்று தாயாரை காப்பாற்றியுள்ளார். இதையடுத்து தாயர் பூசாரி, மந்திரவாதிகளை அழைத்து  பூஜைகள் செய்துள்ளார். இத்தனை செய்தும் தாய்  ஊரை விட்டு கிளம்பாமையால் தன் அம்மாவுடன் பழகியவர்களின் வீடுகள் மற்றும் வைக்கோல் போர்களுக்கு தீ வைக்க கிராம வாசிகள்  தங்கள் கிராமத்திற்கு பில்லி சூனியம் வைத்து விட்டதாக மந்திரவாதிகள், பூசாரிகளை அழைத்து பூஜை செய்வது, ஆடுகளை லி கொடுப்பது என்று பல வேலைகளை செய்துள்ளனர். ஆனாலும்,  பிரச்சனை தீராது இருந்துள்ளது. இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரிய வர இது குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் கிராமத்தை கண்காத்ததுடன் பலரை விசாரணையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் கீர்த்தி சிக்கிய நிலையில் அவர் உண்மையை கூறியுள்ளார். அதையடுத்து  பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement