ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி பிற்போடப்பட்டது

148

இலங்கையில் இடம்பெறவிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஓருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

அத்தோடு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டை மகிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.

ஆப்கானிஸ்தானின் காபுலில் இருந்து பயணிக்கும் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பயணத்தடை காரணமாக இந்த தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக அந்த கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு பாகிஸ்தான் மற்றும் டுபாய் ஊடாக இலங்கையை அடையும் போது கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்படும் மன ரீதியான சிக்கல்களை கருத்திற்கொண்டு இரண்டு கிரிக்கெட் சபைகளும் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன.மேலும் குறித்த தொடரினை அடுத்த வருடம் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: