தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த கைக்கூலிதான் சாணக்கியன்; கடுமையான சாடல்!

58

தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த ஒரு கைக்கூலிதான் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் கடுமையாக சாடியுள்ளார்.

நாட்டில் கொரோனா ​தொற்று அதிகரித்துத்துச் செல்வது தொடர்பில், இன்று பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் வெட்கமில்லாமல் ஒரு பெரிய பொய்யை கூறியிருக்கின்றார், கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையின முதலமைச்சரை கொண்டு வருவதற்கு நாங்கள் முற்படுகிறோம் என்று.

அல்லாஹ் மீது சத்தியமாக சொல்கின்றோம் அவ்வாறான காட்டிக்கொடுப்புக்களை நாங்கள் செய்யவில்லை அவ்வாறான சமூகத்தில் நாங்கள் பிறக்கவில்லை, நீங்கள்தான் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை விட்டு வந்த பிள்ளையானுடையை கட்சியில் அமைப்பாளராக இருந்திருக்கிறீர்கள், இன்று தமிழ் மக்களை நசுக்குகின்ற என்று சொல்கிற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அமைப்பாளராக இருந்திருக்கிறீர்கள் வெட்கமில்லாமல் இன்று வந்து சிறுபான்மை மக்களின் உரிமை பற்றி பேசுகிறீர்கள்.

உங்களிடம் சவாலொன்றை விடுகிறேன் அம்பாறையில் எழுவது வீதமான தமிழ் பேசும் மக்கள் வாழ்கின்றனர், அந்த மாவட்டத்தை பிரித்து ஏன் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரு மாவட்டமாக உருவாக்க ஏன் நீங்கள் போராட முடியாது, கேவலம் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பேசும் அரசாங்க அதிபரை கொண்டுவர வக்கில்லாமல் இருக்கிறோம்.

ஏனென்றால் அதுதான் முஸ்லீம் இன எதிர்ப்பு அரசியலை செய்துகொண்டு தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் மூட்டிவிடுகின்ற, அரசியல் லாபம் தேடுகின்ற மிக கேவலமான மிக இழிவான அரசியலை இன்று சாணக்கியன் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே சாணக்கியன் எம்-பியை முஸ்லீம் சமூகம் தலையில் தூக்கி வைத்து அவருக்கு பெரும் மதிப்பை கொடுத்தனர், இன்று அந்த நம்பிக்கை சுக்குநூறாக்கப்பட்டு விட்டது, இந்த நாட்டில் எத்தனையோ தமிழ் தலைவர்கள் கண்ணியமான முறையில் இன்றும் இருந்துகொண்டிருக்கின்ற நிலையில் இன்று பச்சை இனவாதமாக எங்களை கைக்கூலி என்று சொல்லுகின்றார், யார் கைக்கூலி என்பதனை வரலாறு சொல்லியிருக்கின்றது, அவர் பிள்ளையானின் ஒரு கைக்கூலியாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கைக்கூலியாக இந்த நாட்டின் தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த ஒரு கைக்கூலி என்பதனை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாங்கள் 20-க்கு வாக்களித்தோம் என்கின்ற விடயம் ஒரு அரசியல் வியூகம், அதன் காரணமாகத்தான் இன்று எங்களின் ஆழ்புல பிரதேசங்களை உங்களிடமிருந்து பாதுகாத்துக்கொண்டிருக்கின்றோம் சாணக்கியன் அவர்களே என அவர் மேலும் தனது உரையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: