• Mar 29 2024

190வது பிறந்த தினத்தை கொண்டாடும் விசித்திர ஆமை!

crownson / Dec 4th 2022, 9:13 am
image

Advertisement

செஷெல்ஸ் தீவைச் சேர்ந்த மாபெரும், வயதான ,மூத்த  ஜோனத்தன் என்ற ஆமை 190வது வயது பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடுகிறது.

உலகின் ஆக வயதான நிலத்தில் வாழும் விலங்கு என்று இது பெயர் பெற்றுள்ளது.

அது தற்போது தென் அட்லாண்டிக் தீவான செயிண்ட் ஹெலெனாவில்  ஜோனத்தன் ஆமை உள்ளது. 

இந்தச் சிறப்புப் பிறந்த நாளைக் கொண்டாட தீவின் ஆளுநர் மாளிகை 3 நாள்களுக்குப் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

அங்குதான் ஜோனத்தன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு ஜோனத்தன் ஆமைக்கு அஞ்சல் முத்திரைகள் வெளியிடவும் திட்டம் உள்ளது.

சரி..ஆமைக்கு வயது 190 என்று எப்படித் துல்லியமாகச் சொல்ல முடியும்? அதன் பிறப்பு குறித்த பதிவுகள் ஏதுமில்லை.

என்றாலும், அது 1832 ஆண்டில் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அது 1882ஆம் ஆண்டு செஷெல்ஸ் தீவிலிருந்து செயிண்ட் ஹெலெனா தீவுக்குக் கொண்டுவரப்பட்டது.

அதனால் இது அதன் 200ஆவது பிறந்தநாளாகவும் இருக்கலாம் என்று செஷெல்ஸ் தீவின் சுற்றுலாத் தலைவர் கூறியுள்ளார்.

190வது பிறந்த தினத்தை கொண்டாடும் விசித்திர ஆமை செஷெல்ஸ் தீவைச் சேர்ந்த மாபெரும், வயதான ,மூத்த  ஜோனத்தன் என்ற ஆமை 190வது வயது பிறந்த தினத்தை மிக விமர்சையாக கொண்டாடுகிறது. உலகின் ஆக வயதான நிலத்தில் வாழும் விலங்கு என்று இது பெயர் பெற்றுள்ளது.அது தற்போது தென் அட்லாண்டிக் தீவான செயிண்ட் ஹெலெனாவில்  ஜோனத்தன் ஆமை உள்ளது. இந்தச் சிறப்புப் பிறந்த நாளைக் கொண்டாட தீவின் ஆளுநர் மாளிகை 3 நாள்களுக்குப் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும். அங்குதான் ஜோனத்தன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டுள்ளது. பிறந்தநாளை முன்னிட்டு ஜோனத்தன் ஆமைக்கு அஞ்சல் முத்திரைகள் வெளியிடவும் திட்டம் உள்ளது.சரி.ஆமைக்கு வயது 190 என்று எப்படித் துல்லியமாகச் சொல்ல முடியும் அதன் பிறப்பு குறித்த பதிவுகள் ஏதுமில்லை.என்றாலும், அது 1832 ஆண்டில் பிறந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அது 1882ஆம் ஆண்டு செஷெல்ஸ் தீவிலிருந்து செயிண்ட் ஹெலெனா தீவுக்குக் கொண்டுவரப்பட்டது.அதனால் இது அதன் 200ஆவது பிறந்தநாளாகவும் இருக்கலாம் என்று செஷெல்ஸ் தீவின் சுற்றுலாத் தலைவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement