பேஸ்புக்கின் மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப், நெட்டிசன்களின் தவிர்க்க முடியாத தகவல் தளமாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஒட்டுக் கேட்கப்படும் என்ற அச்சம் இல்லாமல் நம்பகத்தன்மையுடன் அதில் தகவலையும், மீடியாவையும் பறிமாறி வந்த மக்களின் மீது, வாட்ஸ் ஆப், புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
வாட்ஸ்ஆப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- .பயனாளர்களின் தகவல்கள், தொலைபேசி எண், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தனையென அனைத்தும் வாட்ஸ் ஆப்பால் சேகரித்து வைக்கப்படும்.
- .வாட்ஸ்ஆப் பேமென்ட்ஸ் என புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தி அதில் இந்த விவரங்களை சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- .நாம் என்ன விதமான போனை பயன்படுத்துகிறோம், எங்கெல்லாம் செல்கிறோம் என்பதை வாட்ஸ் ஆப் கண்காணிக்கும்.
- நீங்கள் யாருக்கு, எதற்காக, எங்கு டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக பண பரிவர்த்தனை நடத்துகிறீர்கள் என்பதையும் வாட்ஸ் ஆப் கண்டுபிடிக்கும்.
- .பண்டிகை காலம் போன்ற தருணங்களில் நீங்கள் எந்த வகையில் பணத்தை செலவழிக்கிறீர்கள் என்பதை அறியவும் வாட்ஸ்ஆப் விரும்புகிறது.
- .வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் தகவல்கள் 30 நாட்களுக்கு அதன் சர்வர்களில் சேமித்து வைக்கப்படும்.
- பயனாளர்கள் குறித்த விவரங்களை திரட்டி பேஸ்புக் வாயிலாக பிற தொழில் நிறுவனங்களுக்கு வழங்குவதும் இதன் பின்னணியில் உள்ளது.
- .வாட்ஸ்ஆப்பின் ஒவ்வொரு பயனாளரின் விவரங்களையும், நடமாட்டத்தையும் பின்தொடர்ந்து அதன் வாயிலாக பணத்தை சம்பாதிப்பது தான் பேஸ்புக்கின் திட்டம்.
- புதிய நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டால் தொடர்ந்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்.
- நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள விருப்பம் இல்லை என்றால் அந்த வாட்ஸ்ஆப் கணக்கு நீக்கப்பட்டு விடும்.
- புதிய நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளாதவர்கள் பிப்ரவரி 8 க்கு மேல் வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல்களை அனுப்ப இயலாது.
- சாதாரண பயனாளர்கள், என்ன ஏது என்று புரிந்து கொள்ளமலேயே, ஒப்புதல் அளிக்கும் பட்டனை தட்டி விடுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள்?
“வாட்சாப் சேவை இந்தியாவில் அதிகம் வரத் தொடங்கிய போது, தரவுகள் ஃபேஸ்புக்குக்கே கொடுக்கப்படாது, தனியாகவே வைத்திருக்கப்படும் என்றார்கள். இப்போது திரட்டும் தரவுகள் மெல்ல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் என்கிறார்கள். பிறகு இது வணிக நோக்கங்களுக்காக மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்கப்படலாம். ஒரு கட்டத்தில் வாட்சாப்பில் கூட விளம்பரம் வரும் சூழல் உருவாகும்” என்கிறார் தொழில்நுட்பத் துறை நிபுணர் மற்றும் கணியம் அறக்கட்டளையைச் சேர்ந்த த.ஸ்ரீநிவாசன்.
மேலும் “ஏற்கனவே நாம் அனைவரும் இண்டர்நெட் பபுள் என்றழைக்கப்படும் ஒரு வித வளையத்துக்குள் தான் இருக்கிறோம். இந்த தரவுகள் வெளிப்படையாகத் திரட்டப்படுவதால் இனி இந்த வளையம் இன்னும் வலுவாகும். தனி நபரைக் குறிவைத்து கொடுக்கப்படும் விளம்பரங்கள் இன்னும் அதிகரிக்கலாம்.
அவ்வளவு ஏன் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் போன்றவை இந்தியாவில் கூட நடக்கலாம். இதை எல்லாம் கட்டுப்படுத்த, இந்தியாவில் தெளிவான தொழில்நுட்பச் சட்டங்கள் அல்லது தனியுரிமை சட்டங்கள் இல்லை. ஐரோப்பிய யூனியனில் ஜி.டி.பி.ஆர் என்கிற டேட்டா பிரைவசி சட்டங்கள் இருந்தாலும் அவை இன்னும் தெளிவடையாமல் உள்ளன. ஆக இந்தியாவில் இப்படிப்பட்ட பாதுகாப்புச் சட்டங்கள் வர இன்னும் கால தாமதம் ஆகலாம். அதற்குள் வாட்சாப் போன்ற நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களை வலுப்படுத்திக் கொள்ளும்” என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
இது விதி மீறல்
வாட்சாப் லா (Whatsapp Law) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கும் தொழில்நுட்பத் துறை வல்லுநர் பவன் துக்கல் இது ஒரு விதி மீறல் என்கிறார்.
வாட்சாப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை அப்டேட் வெறுமனே இந்தியர்களின் தனியுரிமையை மீறும் விஷயமல்ல, அது இந்திய அரசு வகுத்திருக்கும் சட்டங்களையும் மீறுகிறது.
- தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டுதல் விதிகள் (Information Technology Intermediate Guidelines Rules) 2011
- தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தரவு விதிகள் 2011 (Information Technology Reasonable Security Practices and Procedures and Sensitive Personal Data of Information Rules) ஆகிய இரு விதிகளை வாட்சாப்பின் புதிய பிரைவசி அப்டேட் மீறுகிறது என்கிறார் பவன் துக்கல்.
இந்தியா தனக்கு எத்தனை முக்கியமான பெரிய நாடு என்பதை வாட்சாப் அறியும். அதோடு சைபர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவில் பலமான சட்டங்கள் இல்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள் என்கிறார் பவன்.
தொழில்நுட்பச் சட்டம் 2000-ம் தான் இந்தியாவின் சைபர் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை போன்ற விஷயங்களைக் கொஞ்சம் கண்காணிக்கிறது. ஆனால் அதுவும் வாட்சாப் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதிராக அத்தனை பலமாக இல்லை என்கிறார் பவன்.
தனியுரிமை – ஓர் அடிப்படை உரிமை
வாட்சாப்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
வாட்சாப்
கடந்த 2017-ம் ஆண்டு, முன்னாள் நீதிபதி புட்டசுவாமி வழக்கில், தனியுரிமை என்பது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை என் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதோடு தனியுரிமையை அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவுடன் இணைத்தது உச்ச நீதிமன்றம். இதை நாம் மறந்திருக்கமாட்டோம்.
அதே நேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, வாட்சாப் வழியாக இஸ்ரேலிய நிறுவனமான பக்சாஸ் பல்வேறு இந்தியர்களை உளவு பார்த்ததையும், 2016-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனம் செய்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தையும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பொதுக் கொள்கைத் தலைவராக இருந்த அங்கி தாஸ் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகளையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு பொருளை விலை கொடுக்காமல் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த பொருளுக்கு கொடுக்கும் விலை நீங்கள் தான் என ஒரு வாசகமுண்டு. வாட்சாப்பின் கொள்கை அப்டேட்களைப் பார்க்கும் போது அது தான் நினைவுக்கு வருகிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்தியாவில் தனி நபர்களின் தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டம் கிடப்பில் இருக்கிறது. இந்த சட்டம் கிடப்பில் இருக்கும் போதே, வாட்சாப் தன் புதிய கொள்கை அப்டேட்களைக் கொண்டு வர விரும்புகிறது. இந்த சட்டம் வருவதற்கு முன் வாட்சாப்பின் கொள்கை முடிவுகளை அமல்படுத்திவிட்டால், அதன் பின் இந்த சட்டம் வாட்சாப்பை பெரிதாக கட்டுப்படுத்தாது என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் சைபர் சட்ட வல்லுநர் முனைவர் கர்னிகா சேத்.
பிற செய்திகள்:
- மின்னஞ்சல் மூலம் போலிப் பரிசு-என்னவொரு சாமர்த்திய திருட்டு!
- போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ். இந்துக்கல்லூரி மாணவன் வீட்டிற்கு அனுப்பி வைப்பு
- தமிழர் நிலப்பரப்பில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிப்பு
- திடீர் பல்டி; துணை வேந்தர் சொல்வதில் உண்மை இருக்கிறதா?
- யாழில் நினைவுத் தூபி இடித்தழிப்பு; பல பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் இணைவு!
- அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!
- நாளை முற்றாக முடங்கவுள்ள வடக்கு, கிழக்கு; முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!
- யாழ்.பல்கலை விவகாரம்; அரசாங்கத்திற்கெதிராக அங்கஜன் கடும் கண்டனம்?!
- யாழ். பல்கலை துணைவேந்தர் தொடர்பில் சித்தார்த்தன் வெளியிட்ட ரகசியம்?
- யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
- நாம் மன்னிப்பு கோருகிறோம்; யாழ்.பல்கலையிலிருந்து வெளியான அறிக்கை!
- காணொலி வாயிலாக சாணக்கியன் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
- EPDP-க்கு நேரடி சவால் விடுத்துள்ள இளைஞன்!
சமூக ஊடகங்களில்:
- ஃபேஸ்புக் : சமூகம் முகநூல்
- டிவிட்டர் : சமூகம் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : சமூகம் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : சமூகம் யு டியூப்