• Mar 29 2024

ஒரே நேரத்தில் தெரிந்த சூரிய குடும்ப கோள்கள்! அரிய நிகழ்வின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Chithra / Jan 5th 2023, 8:46 am
image

Advertisement

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா ஒவ்வொரு நாளும் வானியல் தொடர்பாக புதிய படங்களை வெளியிட்டு வருகிறது. 

அந்த வகையில் நாசா சமீபத்தில் ஒரு அரிய நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.

அதில் நமது சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களும் ஒரே நேரத்தில் பூமியில் இருந்து தெரிந்தது. 'பிளானட் பரேட்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது.

இதுபோன்ற கோள்கள் அணிவகுப்பு என்பது ஒரு வானியல் அபூர்வ நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் போது வெறும் கண்ணாலேயே வானத்தில் பல கிரகங்களையும், காணமுடிகிறது.

இந்த காட்சியை நாசா கடந்த 2-ந் தேதி வானியல் படமாக வெளியிட்டுள்ளது. அதில் சூரிய அஸ்தனமத்திற்கு பிறகு கிரக அணிவகுப்பு என்ற தலைப்பில் உள்ள அந்த படத்தில் வியாழன், செவ்வாய், வீனஸ், சனி மற்றும் புதன் போன்ற பல கிரகங்கள் மாலை நேரத்தில் ஊதா நிற வானத்திற்கு எதிரில் பிரகாசிப்பதை காணமுடிகிறது.

செவ்வாய், யுரேனஸ், வியாழன், நெப்டியூன், சனி, புதன் மற்றும் வீனஸ் என சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

வானியலாளரும், புகைப்படகலைஞருமான டங்க் டெசல் எடுத்த இந்த படத்தில் சில பிரகாசமான நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.


ஒரே நேரத்தில் தெரிந்த சூரிய குடும்ப கோள்கள் அரிய நிகழ்வின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா ஒவ்வொரு நாளும் வானியல் தொடர்பாக புதிய படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாசா சமீபத்தில் ஒரு அரிய நிகழ்வின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.அதில் நமது சூரிய குடும்பத்தின் அனைத்து கிரகங்களும் ஒரே நேரத்தில் பூமியில் இருந்து தெரிந்தது. 'பிளானட் பரேட்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது.இதுபோன்ற கோள்கள் அணிவகுப்பு என்பது ஒரு வானியல் அபூர்வ நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வின் போது வெறும் கண்ணாலேயே வானத்தில் பல கிரகங்களையும், காணமுடிகிறது.இந்த காட்சியை நாசா கடந்த 2-ந் தேதி வானியல் படமாக வெளியிட்டுள்ளது. அதில் சூரிய அஸ்தனமத்திற்கு பிறகு கிரக அணிவகுப்பு என்ற தலைப்பில் உள்ள அந்த படத்தில் வியாழன், செவ்வாய், வீனஸ், சனி மற்றும் புதன் போன்ற பல கிரகங்கள் மாலை நேரத்தில் ஊதா நிற வானத்திற்கு எதிரில் பிரகாசிப்பதை காணமுடிகிறது.செவ்வாய், யுரேனஸ், வியாழன், நெப்டியூன், சனி, புதன் மற்றும் வீனஸ் என சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. வானியலாளரும், புகைப்படகலைஞருமான டங்க் டெசல் எடுத்த இந்த படத்தில் சில பிரகாசமான நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement