• Apr 19 2024

2023ஆம் ஆண்டில் முதல் சதத்தை பதிவு செய்த வீரர்

Chithra / Jan 3rd 2023, 7:09 am
image

Advertisement

நியூஸிலாந் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டி கராச்சியில் நேற்று (02.01.2023) இடம்பெற்றது.

இந்த போட்டியில் துடுப்பாட்டத்தில் டெவன் கொன்வே சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.

இதன் மூலம் புத்தாண்டில் முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற வீரர் என்ற பெருமையை டெவன் கொன்வே பெற்றுக்கொண்டார்.

இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கராச்சியில் கடந்த வருட இறுதியில் முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

அந்த போட்டியில் சதம் குவித்த டொம் லெதம் இப் போட்டியிலும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.


டொம் லெதம் ஆட்டமிழந்த பின்னர் டெவன் கொன்வேயுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 2ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், அதன் பின்னர் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்தன. திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெவன் கொன்வே 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 122 ஓட்டங்களைப் பெற்றார்.

இதேவேளை டொம் பளண்டல் 30 ஓட்டங்களுடனும் இஷ் சோதி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சில் அகா சல்மான் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஸீம் ஷா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். 

2023ஆம் ஆண்டில் முதல் சதத்தை பதிவு செய்த வீரர் நியூஸிலாந் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டி கராச்சியில் நேற்று (02.01.2023) இடம்பெற்றது.இந்த போட்டியில் துடுப்பாட்டத்தில் டெவன் கொன்வே சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.இதன் மூலம் புத்தாண்டில் முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற வீரர் என்ற பெருமையை டெவன் கொன்வே பெற்றுக்கொண்டார்.இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதற்கமைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.கராச்சியில் கடந்த வருட இறுதியில் முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.அந்த போட்டியில் சதம் குவித்த டொம் லெதம் இப் போட்டியிலும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.டொம் லெதம் ஆட்டமிழந்த பின்னர் டெவன் கொன்வேயுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 2ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.ஆனால், அதன் பின்னர் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்தன. திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெவன் கொன்வே 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 122 ஓட்டங்களைப் பெற்றார்.இதேவேளை டொம் பளண்டல் 30 ஓட்டங்களுடனும் இஷ் சோதி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சில் அகா சல்மான் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஸீம் ஷா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement