• Apr 24 2024

பொலிதீன் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு!

Tamil nila / Dec 16th 2022, 12:19 pm
image

Advertisement

பொலித்தீன் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்து இரண்டு தொன்களுக்கும் அதிகமான தரமற்ற லஞ்ச்சீற்களைக் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவினர் கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையையே இவ்வாறு சோதனை இட்டுள்ளனர்.


இந்த ஆண்டுஅதிகார சபை நடத்திய மிகப்பெரிய பாலித்தீன் சோதனை இதுவாகும் என கூறப்படுகின்றது.


அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கெஸ்பேவ, பதுஅந்தர பிரதேசத்தில் பொலித்தீன் தொழிற்சாலையொன்று சோதனையிடப்பட்டு, 20 மைக்ரோனுக்குக் குறைவான 2157 கிலோவுக்கும் அதிகமான லஞ்ச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த லஞ்ச் சீட்டுகளின் பெறுமதி சுமார் ஏழு இலட்சம் ரூபா என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.


இந்தத் தொழிற்சாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பன நடவடிக்கை எடுத்துள்ளன.


2017ஆம், ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2034/34 மூலம் 20 மைக்ரோனுக்குக் குறைவான லஞ்ச் சீற்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 


பொலிதீன் தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு பொலித்தீன் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்து இரண்டு தொன்களுக்கும் அதிகமான தரமற்ற லஞ்ச்சீற்களைக் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் புலனாய்வுப் பிரிவினர் கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையையே இவ்வாறு சோதனை இட்டுள்ளனர்.இந்த ஆண்டுஅதிகார சபை நடத்திய மிகப்பெரிய பாலித்தீன் சோதனை இதுவாகும் என கூறப்படுகின்றது.அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் கெஸ்பேவ, பதுஅந்தர பிரதேசத்தில் பொலித்தீன் தொழிற்சாலையொன்று சோதனையிடப்பட்டு, 20 மைக்ரோனுக்குக் குறைவான 2157 கிலோவுக்கும் அதிகமான லஞ்ச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த லஞ்ச் சீட்டுகளின் பெறுமதி சுமார் ஏழு இலட்சம் ரூபா என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்தத் தொழிற்சாலைக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பன நடவடிக்கை எடுத்துள்ளன.2017ஆம், ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி இலக்கம் 2034/34 மூலம் 20 மைக்ரோனுக்குக் குறைவான லஞ்ச் சீற்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement