• Apr 25 2024

வடக்கு மாகாணத்திற்கான அதிகாரங்கள் மத்திக்கு செல்லகூடாது! – ஆளுநரிடம் வலியுறுத்திய சார்ள்ஸ்.! samugammedia

Chithra / May 22nd 2023, 11:43 am
image

Advertisement

வடக்கு மாகாணத்தினுடைய முழுமையான அதிகாரங்கள், மத்திக்குச் செல்லாதபடி புதிய ஆளுநர் பார்த்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று கடமைகளை பெறுபேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணியாற்றிய போது பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது. 

தற்போது அந்த விடங்களை ஞாபகப்படுத்தியுள்ளேன். 

புதிய ஆளுநர் மாகாணத்தினுடைய முழுமையான அதிகாரங்கள் மத்திக்குச் செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.  

தற்போது மாகாணத்திலுள்ள பிரதேச செயளாளர்கள், பொலிஸ்மா அதிபர்களைக் கூட  முதலமைச்சரினுடைய அனுமதியோடு நியமிக்கப்பட வேண்டுமென, 13ம் திருத்தச்சட்டத்தில் சட்டவரைபு காணப்படினும் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.

எனவே மாகாணத்திலுள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.- என்றார்.

வடக்கு மாகாணத்திற்கான அதிகாரங்கள் மத்திக்கு செல்லகூடாது – ஆளுநரிடம் வலியுறுத்திய சார்ள்ஸ். samugammedia வடக்கு மாகாணத்தினுடைய முழுமையான அதிகாரங்கள், மத்திக்குச் செல்லாதபடி புதிய ஆளுநர் பார்த்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று கடமைகளை பெறுபேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார்.கடந்த காலங்களில் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணியாற்றிய போது பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தது. தற்போது அந்த விடங்களை ஞாபகப்படுத்தியுள்ளேன். புதிய ஆளுநர் மாகாணத்தினுடைய முழுமையான அதிகாரங்கள் மத்திக்குச் செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.  தற்போது மாகாணத்திலுள்ள பிரதேச செயளாளர்கள், பொலிஸ்மா அதிபர்களைக் கூட  முதலமைச்சரினுடைய அனுமதியோடு நியமிக்கப்பட வேண்டுமென, 13ம் திருத்தச்சட்டத்தில் சட்டவரைபு காணப்படினும் எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.எனவே மாகாணத்திலுள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement