• Apr 25 2024

மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் ஜனாதிபதியின் கருத்து சிரிப்பிற்குரியது! சுரேஷ் பிறேமச்சந்திரன் samugammedia

Chithra / Jun 4th 2023, 9:08 pm
image

Advertisement

ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க தேர்தலை நடாத்தினால் தான் தோற்றுவிடுவேன் என நம்பி தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து சிரிப்பிற்குரியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி  ரணில் வி்க்கிரமசிங்க தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றத்திற்குள் வந்தார். பின் மக்களின் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச  மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியை இராஜிநாமா செய்ததன் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ பிரதமராக வந்தார்.

மக்களின் எதிர்ப்பால் கோட்டபாய நாட்டை விட்டு ஓடியதும் சட்ட வழிமுறையின் பிரகாரம் ஜனாதிபதியாக வந்தார். ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்படாத ஜனாதிபதியாகக் காணப்படும் நிலையில் மக்களும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும்  இவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர் தேல்தலை நடாத்தி தனது பலத்தை வெளிப்படுத்துவதன் மூலமே மக்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் இல்லாமல் போகும்.  

பொருளாதார ரீதியாக நாட்டை ரணில் விக்கிரமசிங்க முன்னேற்றி விட்டார் எனக் கூறப்பட்டாலும் இந்த நாட்டினுடைய 53 பில்லியன் டொலர் கடன்கள் இதுவரை  திருப்பச் செலுத்தப்படாது கால அவகாசங்கள் கோரப்பட்டுள்ளது.  கால அவகாசத்தை இந்தியா , சீனா உட்பட உலக நாடுகள் பல வழங்கியுள்ளன.

நாட்டின் டொலர் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. தற்போதும் வாகன இறக்குமதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

நாட்டினுள் வரும் சுற்றுலாப் பயணிகளால் நாட்டிற்குள் டொலர் வருகின்றது என்பது யதார்த்தமான உண்மை.  ஆயினும் இந்த நாட்டிற்கான இறக்குமதிகளை முழுமையாக திறந்து விடப்படுமிடத்தோ , கடனை மீளச் செலுத்துமிடத்தோ நாடு வங்குரோத்து நிலைக்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.

நாட்டில் கடன் வாங்குவதை தவிர வெளிநாட்டு முதலீடுகளின் வருகை அதிகரித்ததாக தெரியவில்லை. 

புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகள், முதலீடுகளை எதிர்பார்கின்றாரே தவிர வேறு வழிகளி்ல்  முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எவையும் அவரிடம் காணப்படவி்ல்லை.

இதைவிட இரண்டு நாட்களுக்கு முன் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இலங்கை மக்கள் தேர்தலில் அக்கறை காட்டவில்லையெனவும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலே அக்கறையாக உள்ளார்கள் என்ற கோணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேலைகளில் விடுப்பெடுத்து பணத்தைச் செலவு செய்து கட்டுப்பணத்தைக் கட்டியிருந்தார்கள்.

உள்ளூராட்சி சபைகள் ஜனநாயக முறையில் கொண்டு நடாத்தப்பட வேண்டும் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட தயாராகவிருந்தார்கள்.

தனக்கும் தேர்தல் நிறுத்தத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என ஜனாதிபதி கூறியிருப்பினும் அவர்தான் பொறுப்பு என்ற நிலவரம் காணப்பட்டது.

தேர்தலை நடாத்தினால் தான் தோற்றுவிடுவேன் என நம்பி தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து சிரிப்பிற்குரியது.

அதைவிட  அடுத்த வருட முற்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவரும் அவரது கட்சியினரும் பல தடவை கூறி வரும் நிலையில் அந்த தேர்தலுக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது.

மக்கள் யாரும் தேர்தலை நடாத்தக் கூடாது என்ற கோரக்கையை வைத்ததில்லை.  எனவே இந்த நாட்டிற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் நடக்கவில்லை. ஆகவே  ஜனாதிபதி தானாக முரண்பட்ட செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் தவறாகக் காணப்படும் தருணம் மக்கள் தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுவதானது, அவர் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.  

எனவே இவரின் கருத்து முரண்பட்ட தொனியில் பேசுவதையே காட்டுகின்றது. தனது பதவியை தக்க வைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளாகவே இவை அனைத்தும் காணப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

இன்று நேற்றல்ல தங்களுக்கு தமிழ் மக்கள் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும், தாங்கள் சொல்வதை தமிழ் மக்கள் கேட்க வேண்டும் என்ற பாணியிலே தான்  அரச படையினர்,  பொலிசாரின் நடவடிக்கைகள் காணப்படுகின்றமை வெளிப்படையான உண்மை.

திரு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறப்பினராக இருந்த போது பொலிசார், படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றார். அவரின் வீடு எரிக்கப்பட்டது. முன்னாள்எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் பொலிசாரால் தாக்கப்பட்டிருக்கின்றார்.

இ்துபோல் பல்வேறுபட்ட சம்பவங்கள் படையினரால் நடைபெற்றுள்ளன.   சிங்களப் பகுதிகளில் அவ்வாறான சம்பவங்கள் நிச்சயமாக நடைபெறாது என்பது தான் உண்மை.  

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பேது முல்லைத்தீவில் பொலிசார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சம்பவம் தொடர்பான செய்தி அன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தது.

கஜேந்திரகுமார் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது புலனாய்வுத்துறையினர், பொலிசாரின் நடவடிக்கைகள்  நிச்சயமாக கண்டிக்கக்கூடிய விடயம்.  இது அவர்களின் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ளனர்.

அதற்கெதிராக குரலெழுப்பும் சந்தர்ப்பத்தில் வேறு வேறு கோணங்களில் பார்க்கப்பட்டு மறுதலிக்கும் சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன.

வடமாகாணத்தில் இவர்கள் சிங்கள மக்களை நடாத்துகின்ற விதமும் தமிழ் மக்களை நடாத்துகின்ற முறையும் வித்தியாசமான அணுகுமுறையை நாம் காண முடிகின்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள பொலிசாரோ, பாதுகாப்புப்  படையினரோ தமிழரைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும். இங்கு பெரம்பான்மையாக காணப்படும் சிங்களப் படையினரின் வெளிப்பாடு மக்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடே.

இவை கண்டிக்கப்பட வேண்டிய விடயத்தோடு மாற்றியமைக்கப்பட  வேண்டிய விடயங்களாகக் காணப்படுகின்றன. இந் நிலை கஜேந்திரகுமாருக்கு மாத்திரமல்ல. வரலாற்று ரீதியாக பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் அரசாங்கம் பேசும் நல்லிணக்கம் முதல் தமிழர்கள் மீது காட்டும்  பரிவு என்பன நாாடகமாக இருக்குமே தவிர வேறெதுவும் கிடையாது.- என்றார்.

மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் ஜனாதிபதியின் கருத்து சிரிப்பிற்குரியது சுரேஷ் பிறேமச்சந்திரன் samugammedia ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க தேர்தலை நடாத்தினால் தான் தோற்றுவிடுவேன் என நம்பி தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து சிரிப்பிற்குரியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி  ரணில் வி்க்கிரமசிங்க தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றத்திற்குள் வந்தார். பின் மக்களின் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச  மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியை இராஜிநாமா செய்ததன் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ பிரதமராக வந்தார்.மக்களின் எதிர்ப்பால் கோட்டபாய நாட்டை விட்டு ஓடியதும் சட்ட வழிமுறையின் பிரகாரம் ஜனாதிபதியாக வந்தார். ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்படாத ஜனாதிபதியாகக் காணப்படும் நிலையில் மக்களும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும்  இவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர் தேல்தலை நடாத்தி தனது பலத்தை வெளிப்படுத்துவதன் மூலமே மக்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் இல்லாமல் போகும்.  பொருளாதார ரீதியாக நாட்டை ரணில் விக்கிரமசிங்க முன்னேற்றி விட்டார் எனக் கூறப்பட்டாலும் இந்த நாட்டினுடைய 53 பில்லியன் டொலர் கடன்கள் இதுவரை  திருப்பச் செலுத்தப்படாது கால அவகாசங்கள் கோரப்பட்டுள்ளது.  கால அவகாசத்தை இந்தியா , சீனா உட்பட உலக நாடுகள் பல வழங்கியுள்ளன.நாட்டின் டொலர் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. தற்போதும் வாகன இறக்குமதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.நாட்டினுள் வரும் சுற்றுலாப் பயணிகளால் நாட்டிற்குள் டொலர் வருகின்றது என்பது யதார்த்தமான உண்மை.  ஆயினும் இந்த நாட்டிற்கான இறக்குமதிகளை முழுமையாக திறந்து விடப்படுமிடத்தோ , கடனை மீளச் செலுத்துமிடத்தோ நாடு வங்குரோத்து நிலைக்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.நாட்டில் கடன் வாங்குவதை தவிர வெளிநாட்டு முதலீடுகளின் வருகை அதிகரித்ததாக தெரியவில்லை. புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகள், முதலீடுகளை எதிர்பார்கின்றாரே தவிர வேறு வழிகளி்ல்  முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எவையும் அவரிடம் காணப்படவி்ல்லை.இதைவிட இரண்டு நாட்களுக்கு முன் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இலங்கை மக்கள் தேர்தலில் அக்கறை காட்டவில்லையெனவும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலே அக்கறையாக உள்ளார்கள் என்ற கோணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேலைகளில் விடுப்பெடுத்து பணத்தைச் செலவு செய்து கட்டுப்பணத்தைக் கட்டியிருந்தார்கள்.உள்ளூராட்சி சபைகள் ஜனநாயக முறையில் கொண்டு நடாத்தப்பட வேண்டும் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட தயாராகவிருந்தார்கள்.தனக்கும் தேர்தல் நிறுத்தத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என ஜனாதிபதி கூறியிருப்பினும் அவர்தான் பொறுப்பு என்ற நிலவரம் காணப்பட்டது.தேர்தலை நடாத்தினால் தான் தோற்றுவிடுவேன் என நம்பி தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து சிரிப்பிற்குரியது.அதைவிட  அடுத்த வருட முற்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவரும் அவரது கட்சியினரும் பல தடவை கூறி வரும் நிலையில் அந்த தேர்தலுக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது.மக்கள் யாரும் தேர்தலை நடாத்தக் கூடாது என்ற கோரக்கையை வைத்ததில்லை.  எனவே இந்த நாட்டிற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் நடக்கவில்லை. ஆகவே  ஜனாதிபதி தானாக முரண்பட்ட செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.ஜனாதிபதியின் கருத்துக்கள் தவறாகக் காணப்படும் தருணம் மக்கள் தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுவதானது, அவர் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.  எனவே இவரின் கருத்து முரண்பட்ட தொனியில் பேசுவதையே காட்டுகின்றது. தனது பதவியை தக்க வைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளாகவே இவை அனைத்தும் காணப்படுவதாக தெரிவித்தார்.இதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் முயற்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,இன்று நேற்றல்ல தங்களுக்கு தமிழ் மக்கள் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும், தாங்கள் சொல்வதை தமிழ் மக்கள் கேட்க வேண்டும் என்ற பாணியிலே தான்  அரச படையினர்,  பொலிசாரின் நடவடிக்கைகள் காணப்படுகின்றமை வெளிப்படையான உண்மை.திரு யோகேஸ்வரன் யாழ்ப்பாண பாராளுமன்ற உறப்பினராக இருந்த போது பொலிசார், படையினரால் தாக்கப்பட்டிருக்கின்றார். அவரின் வீடு எரிக்கப்பட்டது. முன்னாள்எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் பொலிசாரால் தாக்கப்பட்டிருக்கின்றார்.இ்துபோல் பல்வேறுபட்ட சம்பவங்கள் படையினரால் நடைபெற்றுள்ளன.   சிங்களப் பகுதிகளில் அவ்வாறான சம்பவங்கள் நிச்சயமாக நடைபெறாது என்பது தான் உண்மை.  நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பேது முல்லைத்தீவில் பொலிசார் என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சம்பவம் தொடர்பான செய்தி அன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தது.கஜேந்திரகுமார் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போது புலனாய்வுத்துறையினர், பொலிசாரின் நடவடிக்கைகள்  நிச்சயமாக கண்டிக்கக்கூடிய விடயம்.  இது அவர்களின் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி மக்களாக இருந்தாலும் சரி அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டாக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ளனர்.அதற்கெதிராக குரலெழுப்பும் சந்தர்ப்பத்தில் வேறு வேறு கோணங்களில் பார்க்கப்பட்டு மறுதலிக்கும் சந்தர்ப்பங்களே காணப்படுகின்றன.வடமாகாணத்தில் இவர்கள் சிங்கள மக்களை நடாத்துகின்ற விதமும் தமிழ் மக்களை நடாத்துகின்ற முறையும் வித்தியாசமான அணுகுமுறையை நாம் காண முடிகின்றது.வடக்கு மாகாணத்திலுள்ள பொலிசாரோ, பாதுகாப்புப்  படையினரோ தமிழரைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்க வேண்டும். இங்கு பெரம்பான்மையாக காணப்படும் சிங்களப் படையினரின் வெளிப்பாடு மக்கள் மீதான அடக்குமுறையின் வெளிப்பாடே.இவை கண்டிக்கப்பட வேண்டிய விடயத்தோடு மாற்றியமைக்கப்பட  வேண்டிய விடயங்களாகக் காணப்படுகின்றன. இந் நிலை கஜேந்திரகுமாருக்கு மாத்திரமல்ல. வரலாற்று ரீதியாக பல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இவற்றை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால் அரசாங்கம் பேசும் நல்லிணக்கம் முதல் தமிழர்கள் மீது காட்டும்  பரிவு என்பன நாாடகமாக இருக்குமே தவிர வேறெதுவும் கிடையாது.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement