• Oct 01 2023

தேநீர், உணவுப் பொருட்களின் விலையை குறைத்து வர்த்தமானி..! அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை samugammedia

Chithra / Jun 4th 2023, 9:27 am
image

Advertisement

சமையல் எரிவாயு விலை குறைப்பிற்று இணையாக உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான, முறைமை ஒன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த விடயத்தில் அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகார சபை உரிய முறைமைகளைக் கொண்டுவர வேண்டும்.

தேநீர் கோப்பையின் விலை, 30 ரூபா என அறிவித்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.

அவ்வாறு செய்தால், இலங்கையில் உள்ள சிற்றுணவகங்களில், தேநீர் கோப்பையை 30 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


தேநீர், உணவுப் பொருட்களின் விலையை குறைத்து வர்த்தமானி. அரசிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை samugammedia சமையல் எரிவாயு விலை குறைப்பிற்று இணையாக உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கான, முறைமை ஒன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.அகில இலங்கை சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,இந்த விடயத்தில் அரசாங்கம் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.நுகர்வோர் விவகார அதிகார சபை உரிய முறைமைகளைக் கொண்டுவர வேண்டும்.தேநீர் கோப்பையின் விலை, 30 ரூபா என அறிவித்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும்.அவ்வாறு செய்தால், இலங்கையில் உள்ள சிற்றுணவகங்களில், தேநீர் கோப்பையை 30 ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement