• Mar 28 2024

பாவமன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களின் வாழ்கையுடன் விளையாடிய பாதிரியார்! SamugamMedia

Tamil nila / Mar 17th 2023, 6:02 pm
image

Advertisement

தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் பல பெண்களிடம் பேசிய ஆபாச வாட்ஸ் அப் சாட்கள், ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனிடிக் ஆண்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனிடிக் ஆண்டோவிற்கும், காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜினோ என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.


இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு பொலிசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு, பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சமர்ப்பித்த நிலையில் பாதிரியார் தலைமறைவாகியுள்ளார்.


இது தொடர்பாக மினி அஜிதா கூறுகையில்,


பிலாங்காலை பகுதியில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனடிக்ட் ஆன்டோ, அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும், அதை தட்டிக் கேட்டதால் எழுந்த பிரச்சினையில் தனது மகன் ஆஸ்டின் ஜினோ மீது பொய் புகார் அளித்து, போலீசார் மூலம் கைது செய்ததாக கூறினார்.


மேலும், சம்பந்தப்பட்ட பாதிரியார் பல பெண்களோடு கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாகவும், பல நேரங்களில் ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பாதிரியார் மீது குற்றச்சாட்டினார்.


இது தொடர்பாக உரிய ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை காவல்துறைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.


இந்நிலையில் பாதிரியார் பெனிடிக் ஆண்டோ பல பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாட்ஸ் அப் ஷேட்டுகள், ஆபாச புகைப்படங்கள் 'பாவமன்னிப்பு பரிதாபங்கள்' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது   


பாவமன்னிப்பு வழங்குவதாக கூறி இளம் பெண்களின் வாழ்கையுடன் விளையாடிய பாதிரியார் SamugamMedia தமிழகத்தின் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஒருவர் பல பெண்களிடம் பேசிய ஆபாச வாட்ஸ் அப் சாட்கள், ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,களியக்காவிளை அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனிடிக் ஆண்டோ. அழகியமண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனிடிக் ஆண்டோவிற்கும், காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவனான ஆஸ்டின் ஜினோ என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.இதன் பேரில் பெனிடிக் ஆண்டோ கொல்லங்கோடு பொலிசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஆஸ்டின் ஜினோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜிதா நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்ததோடு, பாதிரியாருக்கு எதிராக ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை சமர்ப்பித்த நிலையில் பாதிரியார் தலைமறைவாகியுள்ளார்.இது தொடர்பாக மினி அஜிதா கூறுகையில்,பிலாங்காலை பகுதியில் பாதிரியாராக பணிபுரிந்து வந்த பெனடிக்ட் ஆன்டோ, அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும், அதை தட்டிக் கேட்டதால் எழுந்த பிரச்சினையில் தனது மகன் ஆஸ்டின் ஜினோ மீது பொய் புகார் அளித்து, போலீசார் மூலம் கைது செய்ததாக கூறினார்.மேலும், சம்பந்தப்பட்ட பாதிரியார் பல பெண்களோடு கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்டதாகவும், பல நேரங்களில் ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பாதிரியார் மீது குற்றச்சாட்டினார்.இது தொடர்பாக உரிய ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை காவல்துறைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். நிரபராதியான தனது மகனுக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும், பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து ஆபாச செயல்களில் ஈடுபட்டு வந்த பெனடிக் ஆன்டோ மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.இந்நிலையில் பாதிரியார் பெனிடிக் ஆண்டோ பல பெண்களிடம் ஆபாசமாக பேசிய வாட்ஸ் அப் ஷேட்டுகள், ஆபாச புகைப்படங்கள் 'பாவமன்னிப்பு பரிதாபங்கள்' என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது   

Advertisement

Advertisement

Advertisement