• Apr 23 2024

தமிழ் மக்களின் வளங்கள் தொடர்ந்தும் சூறையாடப்படுகின்றன- அரசியல் ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!SamugamMedia

Sharmi / Mar 13th 2023, 1:41 pm
image

Advertisement

தமிழ் மக்களின் அரும்பொருட்கள் விற்கப்படுவதுடன், வளங்கள் சூறையாடப்படுவதாக அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற 'இடம்பெயர்ந்த நுழைவிடங்கள்' கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி ஊடாக அரும்பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டிருந்த போதிலும் இறுதி யுத்தத்தின் பின்னர் வளங்கள் அபகரிக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன், தற்பொழுதும் தமிழர் பகுதிகளில் உள்ள முதிரை மரங்கள், பாலை மரங்கள் போன்றவை வெட்டிச் செல்லப்படுவதுடன், மன்னாரில் இல்மனைட் அகழப்படுவதாகவும்  தெரிவிவித்துள்ளார்.

தமிழர்களின் கனிம வளங்கள் திருடப்படுவதுடன், மயிலிட்டி துறைமுகம் சுரண்டப்படுகிறது என்றும்  அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வளங்கள், உடைமைகள் சூறையாடப்பட்ட விடயம்  யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வளங்கள் தொடர்ந்தும் சூறையாடப்படுகின்றன- அரசியல் ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்SamugamMedia தமிழ் மக்களின் அரும்பொருட்கள் விற்கப்படுவதுடன், வளங்கள் சூறையாடப்படுவதாக அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற 'இடம்பெயர்ந்த நுழைவிடங்கள்' கவிதை தொகுப்பு வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே நிலாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வன்னி ஊடாக அரும்பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டிருந்த போதிலும் இறுதி யுத்தத்தின் பின்னர் வளங்கள் அபகரிக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.அத்துடன், தற்பொழுதும் தமிழர் பகுதிகளில் உள்ள முதிரை மரங்கள், பாலை மரங்கள் போன்றவை வெட்டிச் செல்லப்படுவதுடன், மன்னாரில் இல்மனைட் அகழப்படுவதாகவும்  தெரிவிவித்துள்ளார்.தமிழர்களின் கனிம வளங்கள் திருடப்படுவதுடன், மயிலிட்டி துறைமுகம் சுரண்டப்படுகிறது என்றும்  அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.இதேவேளை, வளங்கள், உடைமைகள் சூறையாடப்பட்ட விடயம்  யாழ்ப்பாணத்திலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement