தந்தை வீட்டை விட்டு விரட்டியதால் அண்ணன், தங்கை எடுத்த விபரீத முடிவு..!

44

தாய், தந்தையர் வீட்டை விட்டு விரட்டியதால் மனமுடைந்த அண்ணன்- தங்கை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கரந்தை சறுக்கை பகுதியில் வசித்து வந்த கனகராஜ்- காந்திமதி தம்பதி, 15 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களின் மகள் இந்துமதியும், மகன் கரன்ராஜூம், தாய் காந்திமதியிடம் வளர்ந்து வந்துள்ளனர்.

எனினும் இந்நிலையில் 18 வயது பூர்த்தியானதால் தந்தை வீட்டுக்குச் செல்லுமாறு இருவரையும் காந்திமதி விரட்டியதை தொடர்ந்து தந்தை கனகராஜிடம் அடைக்கலமாகியுள்ளனர்.

அத்தோடு சொத்தை அபகரிக்க வந்துவிட்டதாக கூறி இருவரையும் வீட்டை விட்டு கனகராஜ் துரத்தியதாக கூறப்படுகிறது. இதனால் திக்கற்ற நிலையில் விஷமருந்தி மயங்கிய இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: