• Apr 24 2024

மருந்து தட்டுப்பாடு மூன்று மாதங்களில் பூச்சியமாக்கப்படும்! – அமைச்சர் நம்பிக்கை

Chithra / Jan 2nd 2023, 10:36 am
image

Advertisement

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடத்திற்காக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இந்திய கடன் உதவி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் நாட்டில் மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்க மருந்து நிறுவனங்களுக்கு 15 பில்லியன் ரூபாவும், இரண்டு அரச வங்கிகளுக்கு 16 பில்லியன் ரூபாவும் உள்ளடங்களாக சுகாதார அமைச்சு 52 பில்லியன் கடனில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


மருந்து தட்டுப்பாடு மூன்று மாதங்களில் பூச்சியமாக்கப்படும் – அமைச்சர் நம்பிக்கை நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வருடத்திற்காக சுகாதார அமைச்சுக்கு பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இந்திய கடன் உதவி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்கள் நாட்டில் மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆதரவை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.அரசாங்க மருந்து நிறுவனங்களுக்கு 15 பில்லியன் ரூபாவும், இரண்டு அரச வங்கிகளுக்கு 16 பில்லியன் ரூபாவும் உள்ளடங்களாக சுகாதார அமைச்சு 52 பில்லியன் கடனில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement