கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் South Coast பகுதியில் பனிப்பொழிவு காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால் 30,000க்கும் அதிகமான மக்கள் இருளில் தவித்துவருகிறார்கள்.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால், நேற்றிரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex Fraser பாலம் மூடப்பட்டது.
இன்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சிமையம், அத்துடன், மணிக்கு 40 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசலாம் என்றும், ஆகவே, மக்கள் கூடுமானவரை பயணத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
கனேடிய மாகாணம் ஒன்றில் கடுமையான பனிப்பொழிவால் ஏற்பட்ட நிலை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவின் South Coast பகுதியில் பனிப்பொழிவு காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளதால் 30,000க்கும் அதிகமான மக்கள் இருளில் தவித்துவருகிறார்கள்.கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதால், நேற்றிரவு மெட்ரோ வான்கூவரின் சில பகுதிகளை இணைக்கும் Alex Fraser பாலம் மூடப்பட்டது.இன்றும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ள வானிலை ஆராய்ச்சிமையம், அத்துடன், மணிக்கு 40 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்றும் வீசலாம் என்றும், ஆகவே, மக்கள் கூடுமானவரை பயணத்தைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.