பெரியநீலாவணையில் உளுந்து அறுவடை வெற்றியளித்துள்ளது

83

அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட உளுந்து பயிர் செய்கையின் அறுவடை இன்று வெள்ளிக்கிழமை பெரியநீலாவணை விவசாய விரிவாக்கல் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.சமீம் தலைமையில் நடைபெற்றது

மேலும் இச் சேதனப்பசளையை பயன்படுத்தி நஞ்சுத் தன்மையற்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் தனக்கு சிறந்த அறுவடை கிடைத்துள்ளது. உளுந்து பயிர் செய்கை சிறந்த வருமானத்தை பெற்றுத்தரக் கூடிய ஒன்றாகும். என பயிர் செய்கையாளரான விவசாயி தெரிவித்தார்.

அத்தோடு அறுவடை நிகழ்வில் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி அஸ்வினி செந்தூரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: