போராட்டம் இன்னும் முடியவில்லை; சுனாமியாக மீண்டும் வரும்! – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

போராட்டம் முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தாலும், தற்போது நடந்திருப்பது சுனாமி வரும் முன்னே கடல் பின்வாங்குவது போன்றது என ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

சுனாமி ஒரேயடியாக வராது என்றும், அது வரும் போது ஆட்சியாளர்கள் கவிழும் அளவிற்கு போராட்டம் தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

74 ஆண்டுகளாக இந்த நாட்டை அனைத்து விதமான அழிவுகளுக்கு இட்டுச் சென்ற ஆட்சியாளர்கள் எமக்கு என்ன விட்டுச் சென்றுள்ளனர்? அழிவு, அழிவு, அழிவு மட்டுமே, இல்லையா? நம் குழந்தைகளுக்கு நாளை இல்லை. நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.

இந்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஒரு நெருக்கடிக்கு கொண்டு வந்துள்ளனர், பிரச்சினை அல்ல.

ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டு மக்கள் இந்த நாட்டை மீட்க வேண்டும்.

அந்தச் சவாலை முறியடிக்க இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு என்றென்றும் செயற்படவேண்டும்.

சுனாமி போல எதிர்ப்பு அலைகளை எழுப்பி இந்த ஆட்சியாளர்களை கவிழ்ப்பதை தவிர மக்கள் முன் வேறு வழியில்லை.

அடுத்த பொதுப் போராட்டம் மிகப்பெரிய சுனாமியாக வரும்.-என சமந்தா வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை