வாலிபர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வீடியோ வெளியானது!

310

சமந்தா குத்தாட்டம் போட்ட புஷ்பா பட ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதோடு பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக மிரட்டியுள்ளார்.

இப்படத்தினை மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.

குறிப்பாக ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியுள்ளார்.

சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் முதல் முறை என்பதால் ஏற்கனவே பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல் சமந்தா நடனத்திலும் கிளாமரில் கலக்கியுள்ளார்.

மேலும் பாடலின் வரிகள், தமிழில் ஆண்ட்ரியாவின் குரல், சமந்தாவின் கிளாமர் தரிசனம் என பாடலுக்கு இமாலய எதிர்பார்ப்பு.

இதேவேளை, இப்பாடல் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் தான்.