• Apr 20 2024

மாத்தளை பிரதேசத்தை வாட்டி எடுக்கும் வானிலை!

crownson / Dec 27th 2022, 12:15 pm
image

Advertisement

மாத்தளை பிரதேசத்தில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் இன்று (27) காலை வரை 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய மாத்தளை, உக்குவளை, தம்புளை, கலேவல, இரத்தோட்டை, நாவுல,அம்பகங்கோரல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்மேடு சரிவு, மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட பல அனர்த்தங்களால் மாத்தளை மாவட்டத்தில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது, என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஆலோசனைகள் மாத்தளை மாவட்ட அதிபர் தேஜானி திலகரத்னவால் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தளை பிரதேசத்தை வாட்டி எடுக்கும் வானிலை மாத்தளை பிரதேசத்தில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் இன்று (27) காலை வரை 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.அதற்கமைய மாத்தளை, உக்குவளை, தம்புளை, கலேவல, இரத்தோட்டை, நாவுல,அம்பகங்கோரல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண்மேடு சரிவு, மரம் முறிந்து விழுதல் உள்ளிட்ட பல அனர்த்தங்களால் மாத்தளை மாவட்டத்தில் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது, என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஆலோசனைகள் மாத்தளை மாவட்ட அதிபர் தேஜானி திலகரத்னவால் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement