தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்கு 301 ஓட்டங்கள்

359

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மேலும் இப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 300 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 118 ஓட்டங்களையும் சரித் அசலன்க 72 ஓட்டங்களையும் ,தனஞ்சிய டி சில்வா 44 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் பந்துவீச்சில் கேஷவ் மகராஜ் மற்றும் றபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் தென் ஆபிரிக்க அணி 301 என்ற வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: